India vs Zimbabwe 3rd T20I Live Score: 3வது டி20 போட்டி இன்று

இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஹராரேயில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று (ஜூலை 25) நடந்த 2-வது போட்டியிலும் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் இந்திய அணி வென்ற முதல் டி20 தொடர் இதுவாகும். அயர்லாந்து, இங்கிலாந்திடம் 6 போட்டிகளில் தோல்வி தழுவி இருந்த இந்தியா இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி ஹராரே மைதானத்தில் இன்று (26-ம் தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா?என ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.

முதல் 2 ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரில் ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி இருக்கிறது. இந்தியா தொடரை வசப்படுத்தி விட்டதால் இதுவரை ஆடாத பிரப்சிம்ரன் சிங், ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்கே ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் களம் இறக்கப்பட வாய்ப்புள்ளது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை யுனைட்/ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஜிம்பாப்வே அணி: பிரையன் பென்னட் (Brian Bennett), பென் கர்ரன் (Ben Curran), டயோன் மையர்ஸ் (Dion Myers), சிக்கந்தர் ராசா (Sikandar Raza) – கேப்டன், ரியான் பர்ல் (Ryan Burl), வெஸ்லி மாதவேரே (Wessly Madhevere), தாடிவானாஷே மருமானி (Tadiwanashe Marumani) – விக்கெட் கீப்பர், பிராட் எவன்ஸ் (Brad Evans), நியூமேன் நயம்ஹுரி (Newman Nyamhuri), ரிச்சர்ட் ங்கரவா (Richard Ngarava), பிளெசிங் முஸரபானி (Blessing Muzarabani), தனகா சிவங்கா (Tanaka Chivanga), இன்னொசென்ட் கையா (Innocent Kaia), வெலிங்டன் மசகட்சா (Wellington Masakadza), தபட்வா த்சிகா (Tafadzwa Tsiga),

இந்திய அணி:

வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi), அபிஷேக் சர்மா (Abhishek Sharma), இஷான் கிஷன் (Ishan Kishan) – விக்கெட் கீப்பர், ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) – கேப்டன், திலக் வர்மா (Tilak Varma), ரிங்கு சிங் (Rinku Singh), சிவம் துபே (Shivam Dube), ரவி பிஷ்னோய் (Ravi Bishnoi) பிரின்ஸ் யாதவ் (Prince Yadav), யாஷ் தாக்குர் (Yash Thakur), மயங்க் யாதவ் (Mayank Yadav), சூர்யான்ஷ் ஷெட்கே (Suryansh Shedge), ஹர்ஷ் துபே (Harsh Dubey), அசோக் சர்மா (Ashok Sharma), பிரப்சிம்ரன் சிங் (Prabhsimran Singh).

Source link