IPL 2027 – சிஎஸ்கே இல்ல, சாய் கிஷோரை டிரேடிங்கில் வாங்கப் போகும் அணி இதுதான்: ஷாக் சம்பவம் – not csk this ipl team want to get sai kishore from ipl 2027 trading

ஐபிஎல் 2026 சீசனில், ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை நிரப்பாமலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாததால், அது சிஎஸ்கேவுக்கு பெரிய குறையாக இருந்தது. இறுதியில், பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது.

இதனால், அந்த குறையை சரி செய்ய, ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில், குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து சாய் கிஷோரை வாங்க, சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்தது. காரணம், மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான அவருக்கு, அங்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. ரஷித் கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இருப்பதால், சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. மேலும், மனவ் சுதாரும் அந்த அணியில் இருக்கிறார். இப்படி, பலத்த போட்டிகள் அங்கு இருக்கிறது.

இதனால், குஜராத் டைடன்ஸ் அணி மீது சாய் கிஷோர் சற்று அதிருப்தியில் இருந்ததாகவும், இதனால் டிரேடிங்கில் ஒரு நல்ல அணிக்கு அனுப்பிவிடுங்கள். முடிந்த அளவுக்கு சிஎஸ்கேவுக்கு கூட அனுப்ப முயற்சி செய்யுங்கள் என அவர், குஜராத் டைடன்ஸ் அணி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால், சாய் கிஷோரை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக முயற்சி செய்தது. மாற்றாக, உர்வில் படேலை கூட தர தயார் எனத் தெரிவித்தும், குஜராத் டைடன்ஸ் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில், தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சாய் கிஷோரை வாங்க தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்ன காரணம்? பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில், லெக் ஸ்பின்னர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். யுஜ்வேந்திர சஹல், நீண்ட காலமாக, அந்த வேலையை செய்து வந்தார். ஆனால், அவர் போனப் பிறகு, வேறு எந்த ஸ்பின்னரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால்தான், டிரேடிங்கில் சாய் கிஷோரை வாங்க முடிவு செய்துள்ளனர்.

இடது கை ஆப் ஸ்பின்னராக இருக்க கூடிய சாய் கிஷோரால், வலது கை பேட்டர்களுக்கு எதிராக அபாரமாக பந்துவீச முடியும். இதனால்தான், இவரை தேர்வு செய்திருப்பதாக கருதப்படுகிறது. வலது கை பேட்டர்களுக்கு, வலது கை பௌலர் லெக் ஸ்பின் பந்துகளை வீசுவதைவிட, இடது கை பௌலர் ஆப் ஸ்பின் வீசுவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால்தான், கிஷோரை வாங்க தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

குஜராத் டைடன்ஸ் அணிக்கு, மிடில் வரிசையில் தொடர்ச்சியாக நிலைத்து நின்று விளையாடும் பேட்டர் தேவைப்படுகிறார். மேலும், ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் தேவைப்படுவதால், மாற்றாக ஜிதேஷ் சர்மாவை விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

ஒருவேளை, ஆல்ரவுண்டர்கள் வேண்டும் என்றால், லியாம் லிவிங்ஸ்டன், வெங்கடேஷ் ஐயர் ஆகியோரில் ஒருவரை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத் டைடன்ஸ் அணிக்கு, மிடில் வரிசையில் நிலைத்து நின்று விளைஆடும் பேட்டர் தேவைப்படுவதால், ஜிதேஷ் சர்மாவை அனுப்பி வைக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆர்சிபி அணியில், பிலிப் சால்ட், டிம் செய்பர்ட் போன்ற தரமான விக்கெட் கீப்பர் பேட்டர்கள் இருக்கிறார்கள். இதனால், இந்த டிரேடிங், சுமூகமாக முடிய அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.

Source link