இயல்வாகை அமைப்பு சார்பாக இயற்கை வழி மற்றும் மரபுப் பொருட்கள் விற்பனை சந்தை நாளை (செப்டம்பர் 13) கோயம்புத்தூரில் நடைபெறுகிறது. சந்தை நடைபெறும் இடம், நேரம் மற்றும் விற்பனை செய்யப்படும் பொருட்களின் பட்டியல் குறித்து இங்கே பார்க்கலாம்.
இயல்வாகை அமைப்பின் சார்பில் கோயம்புத்தூரில் நடைபெறும் “நம்ம ஊரு சந்தை” செப்டம்பர் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு மேம்பாலம் அருகில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் (பவர் ஹவுஸ் பேருந்து நிறுத்தம் அருகில்) நடைபெற உள்ளது. இச்சந்தை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தோறும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சந்தையில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்கள், பாரம்பரியப் பொருள்கள் மற்றும் நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள் கிடைக்கப் பெறுகின்றன.
சிறுதானியங்கள் மற்றும் அரிசி வகைகள்!
தினை, வரகு, கேழ்வரகு, காட்டுகம்பு, சாமை, பனிவரகு, குதிரைவாலி, வெள்ளை மற்றும் சிவப்பு சோளம் போன்ற சிறுதானியங்களும்; தூயமல்லி (புழுங்கல், பச்சரிசி, கைக்குத்தல் மற்றும் அவல்), தங்க சம்பா, சிவன் சம்பா, மைசூர் மல்லி, ஆத்தூர் கிச்சடி சம்பா உள்ளிட்ட ஏராளமான மரபு அரிசி வகைகளும் விற்பனைக்கு உள்ளன. இவற்றுடன் கருப்புக் கவுனி, மாப்பிள்ளை சம்பா, காட்டுயானை, குதிரைவாலி, பச்சைப்பயறு, கொள்ளு, பார்லி, சோளம் உள்ளிட்ட பல்வேறு அவல் வகைகளும் கிடைக்கின்றன.
பருப்பு வகைகள் மற்றும் சமையல் பொருட்கள்!
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, வெள்ளை மொட்டு உளுந்து, கருப்பு முழு உளுந்து, கருப்பு உடைத்த உளுந்து, தட்ட பயிறு, நரி பயிறு, பச்சைப்பயிறு, கொள்ளு, நாட்டு ராகி மாவு, நாட்டு வர கொத்தமல்லி, தேங்காய்ப்பூ, வரமிளகாய், புளி, கொடம்புளி, இந்துப்பு தூள், நாட்டுச்சர்க்கரை, கரும்பு வெல்லம், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு மற்றும் மலைத்தேன் போன்ற அத்தியாவசியப் பொருட்களும்; நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் உள்ளிட்ட மரச்செக்கு எண்ணெய் வகைகளும் இடம்பெறுகின்றன.
பால் மற்றும் இயற்கை உணவுகள்!
எருமை நெய், நாட்டு மாட்டுப்பால், நாட்டு மாட்டு நெய், நாட்டு மாட்டு பன்னீர், நாட்டு மாட்டு மோர் மற்றும் தேங்காய் மோர் போன்ற பால் சார்ந்த பொருட்களும்; இடி கடலை உருண்டை, எள்ளுருண்டை, கம்பு உருண்டை, ராகி உருண்டை, பாசிப்பருப்பு உருண்டை, சிவப்பு சோளம் உருண்டை, கருப்பட்டி மைசூர்பா, தினை அதிரசம், ஆளி விதை லட்டு, உலர் பழங்கள் ரோல், தினை உருண்டை, கருப்பு உளுந்து உருண்டை, கருப்பட்டி ராகி பால் அல்வா, ரோசாப்பூ அல்வா போன்ற இனிப்புத் தின்பண்டங்களும் கிடைக்கின்றன.
கார வகைகள் மற்றும் மசாலாப் பொடிகள்!
சின்ன வெங்காயம் முறுக்கு, இஞ்சி பூண்டு ஓல பக்கோடா, கருவேப்பிலை முறுக்கு, கரும்பு சாறு முறுக்கு, செவ்வாழை முறுக்கு, ராகி மிக்சர், மாப்பிள்ளை சம்பா அவல் மிக்சர் போன்ற கார வகைகளும்; பிரண்டை பொடி, தூதுவளை பொடி, துளசி பொடி, வல்லாரை பொடி, கறிவேப்பிலை பொடி, முருங்கை இலைப்பொடி, புதினா பொடி, மிளகாய்த் தூள், பூண்டு பொடி, இட்லி பொடி, சாட் மசாலா, பிரியாணி மசாலா மற்றும் பல்வேறு மசாலாப் பொடிகளும் இடம்பெறுகின்றன.
ஊறுகாய் மற்றும் வடகம்!
மா இஞ்சி ஊறுகாய், ஜாதிக்காய் ஊறுகாய், கடாரங்காய் ஊறுகாய், சுண்டைக்காய் தொக்கு, நெல்லிக்காய் ஊறுகாய், இலந்தை ஜாம், ஸ்டார்புரூட் ஊறுகாய், நாரத்தை ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், பிரண்டை ஊறுகாய், இஞ்சி பூண்டு ஊறுகாய், செர்ரி ஊறுகாய், சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல், மோர் மிளகாய், பாகற்க்காய் வத்தல், கொத்தவரங்காய் வத்தல், ராகி குச்சி வடகம், வாழைத்தண்டு வடகம், வெங்காய வடகம் மற்றும் பல்வேறு இலை வடகங்களும் உள்ளன.
பிஸ்கட்டுகள் மற்றும் பேக்கரி பொருட்கள்!
கேழ்வரகு சாக்லேட் பிஸ்கட், நாட்டு கம்பு பிஸ்கட், சோளம் பிஸ்கட், சிறுதானிய மிக்ஸ் பிஸ்கட், மாப்பிள்ளை சம்பா அரிசி பிஸ்கட், கருப்பு கவுனி பிஸ்கட், முருங்கை கீரை பிஸ்கட், கருவேப்பிலை பிஸ்கட், உப்பு பிஸ்கட், மலைநெல்லி பிஸ்கட், முந்திரி பிஸ்கட், முளைகட்டிய சிறுதானிய மாவு, முளைகட்டிய தேங்காய், தேங்காய் பாலில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் சிறுதானிய ஐஸ்-கரீம் (பால், சர்க்கரை மற்றும் முட்டை சேர்க்காதது), மற்றும் பூசணி/தர்பூசணி விதைகளில் தயாரிக்கப்பட்ட வேகன் பன்னீர் கிடைக்கின்றன.
சந்தையில் சுவைக்கக் கூடிய உணவுப் பொருட்கள்!
முருங்கைக் கீரை ரசம், உளுந்தங்கஞ்சி, கொத்தமல்லி சுக்கு காபி, பருத்திப்பால், கரும்புச்சாறு, இளநீர், நாட்டு மாட்டு மோர், சாமை அரிசி சாம்பார் சோறு, பயறு சோறு, துவையல், வாழைப்பூ வடை மற்றும் எந்தவித எண்ணெயும் சூடும் இன்றி தயாரிக்கப்பட்ட விதை லட்டு, கொப்பரை தேங்காய் லட்டு, இயற்கை ரோஸ் மில்க், செம்பருத்தி பூ ஆற்றல் பானம், நெல்லி மல்லி பானம், மாப்பிள்ளை சம்பா இனிப்பு கொழுக்கட்டை உள்ளிட்ட உணவு வகைகளும் கிடைக்கின்றன.
Source link
