Jailer 2 Box Office Collection: ‘லியோ’ சாதனையை தட்டித் தூக்கிய ஜெயிலர் 2; ஒரே வாரத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல்; தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நாளுக்கு நாள் வசூலில் மாஸ் காட்டி வரும் நிலையில், விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் சாதனையை தற்போது ஜெயிலர் 2 முறியடித்துள்ளது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் ஜெயிலர். இந்த படத்தின் 2-ம் பாகமாக கடந்த அக்டோபர் 14-ந் தேதி வெளியான படம் ஜெயிலர் 2. வெளியானது முதலே பாசிட்டீவ் விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் வசூலில் பல சாதனைகளை செய்து வருகிறது. வெளியான எட்டு நாட்களுக்குள் உலகளவில் ரூ. 600 கோடியைத் தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம், வசூல் நிலவரங்களின்படி, 2026-ஆம் ஆண்டின் இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக உருவெடுத்துள்ளது. திரையுலக வசூல் கண்காணிப்பு இணையதமான ‘சாட்னில்க்’ (Sacnilk) தகவலின்படி, ‘ஜெயிலர் 2’ இந்தியாவில் 8-வது நாளில் 13,241 திரையிடல்களில் இருந்து நிகர வசூலாக (Net collection) ரூ. 17.15 கோடியைச் சேகரித்துள்ளது. 

இதன் மூலம் இந்தியாவில் இதன் மொத்த நிகர வசூல் ரூ. 334.35 கோடியாகவும், மொத்த உள்நாட்டு வசூல் (Gross collection) ரூ. 391.55 கோடியாகவும் உயர்ந்துள்ளது. 8-வது நாள் வசூலில் தமிழ் பதிப்பு அதிக பங்களிப்பை அளித்துள்ளது; 5,883 திரையிடல்களில் இருந்து ரூ. 10.75 கோடி வசூலித்துள்ளது. தெலுங்கு பதிப்பு ரூ. 3.60 கோடியும், ஹிந்தி பதிப்பு ரூ. 2.40 கோடியும், கன்னட பதிப்பு ரூ. 40 லட்சமும் வசூலித்துள்ளன.

வெளிநாடுகளிலும் இத்திரைப்படம் தொடர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 8-வது நாளில் வெளிநாட்டு வசூலாக சுமார் ரூ.5 கோடி ஈட்டியுள்ளது. இதன் மூலம் இதன் மொத்த வெளிநாட்டு வசூல் ரூ. 214.50 கோடியை எட்டியுள்ளது. சாட்னில்க் தகவலின்படி, ‘ஜெயிலர் 2’ உலகளவில் இதுவரை மொத்தம் ரூ. 606.05 கோடி வசூலித்துள்ளது.

திரையுலக வசூல் கணிப்பாளரான ‘இந்தியன் பாக்ஸ் ஆபீஸ்’ கூற்றுப்படி, 8 நாட்களிலேயே ரூ. 600 கோடி இலக்கைக் கடந்து, ‘லியோ’ மற்றும் ‘ஜெயிலர்’ படங்களை மிஞ்சியதோடு, எக்காலத்திலும் அதிக வசூல் செய்த 2-வது தமிழ் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பாராட்டிய அல்லு அர்ஜுன்:

நடிகர் அல்லு அர்ஜுன் தனது ‘எக்ஸ் தளத்தில்’ வெளியிட்டுள்ள பதிவில், ஜெயிலர் 2′ ரஜினிகாந்த் சாரின் நட்சத்திர பலம், ஸ்வாக் மற்றும் கம்பீரத்திற்கான உண்மையான சான்று! விறுவிறுப்பைக் குறை்ககாத ஒரு கமர்ஷியல் எண்டர்டெய்னர். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு சிறப்புப் பாராட்டுகள். “சகோதரர்… அனிருத் பின்னிட்டாரு! அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர் அனைவரும் இப்படத்திற்காகத் தங்கள் உழைப்பைக் கொட்டியுள்ளனர். ஷோமேன் நெல்சன் திலீப்குமார் காரு ஒரு கெத்தான மாஸ் ஹிட் கொடுத்துள்ளார்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘ஜெயிலர் 2’, ரஜினிகாந்தின் 2023-ஆம் ஆண்டு வெளியான வெற்றிப் படமான ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சியாகும். ரஜினிகாந்துடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் மிர்னா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Source link