குருபகவான் வரப்போகும் 2026, அக்டோபர் 31ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். மேலும் அங்கு டிசம்பர் 13ஆம் தேதி முதல் 2027 ஏப்ரல் 13ஆம் தேதி வரை வக்ர பெயர்ச்சியை மேற்கொள்ள உள்ளார். குருவின் இந்த வக்ர இயக்கமானது சில குறிப்பிட்ட ராசிகளுக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரக்கூடியதாக அமைய உள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு பகவான் முழு சுபர் என அழைக்கப்படுகின்றார். இவர் வரும் அக்டோபர் 30ஆம் தேதி சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். குருவின் பார்வையை தரக்கூடிய பலனைத் தாண்டி, அவர் இந்த ஆண்டு டிசம்பர் 13 முதல் 2027 ஏப்ரல் 13 வரை 121 நாட்களில் வக்ர பெயர்ச்சியை மேற்கொள்ள உள்ளார். குருவின் இந்த இயக்கம் சில ராசிகளுக்கு அதிக அளவில் நன்மையை தரக்கூடியதாக இருக்கும். அவர்கள் சந்திக்கக்கூடிய சிரமங்களில் இருந்து நிவாரணம் பெறுவார்கள். எந்தெந்த ராசிகள் நன்மையை அதிகமாக பெறுவார்கள் என தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குருவின் வக்கிர பெயர்ச்சி காரணமாக நீங்கள் செய்யக்கூடிய வேலையில் திடீர் நல்ல மாற்றங்களை அனுபவிப்பீர்கள். உங்கள் வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கொண்ட நல்ல விஷயங்கள் எதிர்பார்க்கலாம். மேலும் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பணிகளை முடிக்க வாய்ப்பு கிடைக்கும். நீங்க செய்யக்கூடிய தொழில் மற்றும் தொழில் சார்ந்த திட்டங்களில் முன்னேற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தினாலே பெரிய அளவில் பணம் சேரக் கூடியதாக இருக்கும்.
இழந்த பணம் திரும்ப பெற வாய்ப்பு உருவாக்கும். மாணவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். போட்டி தேர்வுக்கு தயாராக கூடிய அன்பர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சியும் நெருக்கமும் அதிகரிக்கும். உடல்நலம் மேம்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, குருவின் அருளால் இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான எல்லா விதமான பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். வீடு தொடர்பான எந்தவிதமான தகராறும் தீர்க்கப்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளது. இந்தக் காலகட்டத்தில் நீங்கள் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சாத்தியம் உள்ளது.
இந்தக் காலகட்டத்தில், மகர ராசியில் பிறந்தவர்கள் எந்தவொரு பெரிய முதலீட்டையும் செய்வதற்கு முன் கவனமாகச் சிந்திக்க வேண்டும். கல்வி மற்றும் தொழில் ரீதியாக இந்தக் காலம் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். முடிக்கப்படாத பழைய பணிகள் அல்லது திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்படலாம்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள், இந்த நேரத்தில் குருவின் ஆசீர்வாதத்தால் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது. குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திடீரென நிதி ஆதாயம் கிடைக்கவோ அல்லது இழந்த பணம் திரும்பக் கிடைக்கவோ வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.உங்களுடைய கடின உழைப்பிற்கான முழு பலனை அனுபவிப்பீர்கள். மேலும் சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் ஆன்மீகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். நீங்கள் செய்யக்கூடிய முதலீடுகள் மூலம் அதிக நன்மைகளை பெற வாய்ப்புகள் உண்டு.
துலாம் ராசி
துலாம் ராசி சேர்ந்த நண்பர்களுக்கு குருவின் வக்ரநிலை புதிய வாய்ப்புகளை பெற உதவும். மேலும் தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களுடைய வேலை நீங்கள் செய்யக்கூடிய வேலையை மாற்ற முயற்சியில் இருப்பவர்களுக்கு மிகவும் சாதகமான மற்றும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். முதலீடு தொடர்பாக ஆலோசித்து செயல்பட்டால் லாபம் கிடைக்கும்.
உங்கள் சகோதர, சகோதரிகளிடம் இருந்து அல்லது நண்பர்களிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். இது சில முக்கியமான பணிகளை முடிக்க உதவும். பணியிடத்தில் உங்களுடைய திறமை மற்றும் செயல்பாடுகள் கண்டு உங்கள் மேல் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உங்கள் வேலை அனைவராலும் விரும்பப்படும். நீதிமன்ற வழக்குகளை வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
விருச்சிக ராசி
விருச்சிக ராசி சேர்ந்த நண்பர்களுக்கு பல வழியில் நிதி நன்மைகளை பெறுவீர்கள். குறிப்பாக பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கவும், அதன் மூலம் லாபத்தை அனுபவிக்க வாய்ப்புகள் உண்டு. இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். அவர்கள் எதிர்கொள்ளும் தேர்வு, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார்கள்.
மேலும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். பெரியவர்கள் மற்றும் குழந்தைகளிடம் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். அவர்களின் முழு ஆதரவு உங்களுடைய மனதிற்கு தைரியத்தை தரும். காதல் உறவில் இருக்கக்கூடிய தவறான புரிதல்கள் நீங்கும்.
மகர ராசி
மகர ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு குருவின் அருள் இந்த காலத்தில் நிறைவான பலனை தரக்கூடியதாக இருக்கும். குறிப்பாக உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இருக்கக்கூடிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். புரிதல் அதிகரிக்கும். உங்களுடைய வீட்டில் இணக்கமான சூழல் ஏற்படும் என்பதால் குடும்ப பொறுப்புக்கள் முடிப்பதில் சுமூகமான சூழல் உருவாகும். மேலும் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புகள் உண்டு.
கும்ப ராசி
கும்ப ராசி அன்பர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சியானது மிகுந்த நன்மை தரக்கூடியதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் இழந்த பணத்தை மீட்டெடுக்க முடியும். நீங்கள் செய்யக்கூடிய பெரிய முதலீடு அல்லது நிதி சார்ந்த முடிவுகளில் அவசரப்படாமல் நிதானத்தை கடைபிடித்தால் நன்மை ஏற்படும். பணியிடத்தில் உங்களுக்கு பொறுப்புகள் கிடைக்கலாம்.
வியாபாரம் செய்யக்கூடிய அன்பர்களுக்கு பெரிய நிதி ஆதாயம் ஈட்ட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். நிலம் குழந்தைகள் தொடர்பாக எல்லா விதமான பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.
