கேதுவின் மகா தசையானது 7 ஆண்டுகள் ஆகும். ஒருவருக்கு எந்த மகா தசை தொடங்குகிறதோ, அதே கிரகத்தின் புத்தி காலம் தான் முதலில் தொடங்கும். அந்த விதத்தில் ஏழு ஆண்டுகள் கொண்ட கேது மகா தசை தொடங்கும் போது அதன் முதல் புத்தி காலமாக கேது தொடங்கி தொடர்ந்து, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் ஆகிய மற்ற 9 கிரகங்களின் அந்தர்தசைகளும் (புத்தி) வரிசையாக நடக்கும். இந்த காலங்களில் சுப அல்லது அசுப பலன்களை பெறக்கூடியதாக இருக்கும்.
அது மட்டும் இல்லாமல் ஜாதகத்தில் இந்த கேதுவின் நிலையை பார்த்து, அது தரக்கூடிய தசாபுத்தி பலன்கள் அடிப்படையில் பலன்கள் கணிக்கப்படுகின்றன.
கேது தசையில் நவகிரகங்களின் புத்தி காலங்கள்
எண் மகாதசை – புத்தி கால அளவு 1 கேது – கேது 4 மாதம் 27 நாட்கள் 2 கேது – சுக்கிரன் 1 ஆண்டு 2 மாதங்கள் 3 கேது – சூரியன் 4 மாதம் 6 நாட்கள் 4 கேது – சந்திரன் 7 மாதங்கள் 5 கேது – செவ்வாய் 4 மாதம் 27 நாட்கள் 6 கேது – ராகு 1 ஆண்டு 18 நாட்கள் 7 கேது – குரு 11 மாதம் 6 நாட்கள் 8 கேது – சனி 1 ஆண்டு 1 மாதம் 9 நாட்கள் 9 கேது – புதன் 11 மாதம் 27 நாட்கள்
கேது தசா + கேது புத்தி காலம் தரும் பலன்கள்
ஜோதிட விதிகளின்படி கேது தசா கேது 4 மாதங்கள் 27 நாட்கள் வரை நடக்கக் கூடியது. ஒருவருடைய ஜாதகத்தில் 3, 6, 11 ஆக்கிய ஏதேனும் ஒரு இடத்தில் கேது இருந்தால் சுப பலன்களை தரக்கூடியவராக இருப்பார். கேது கிரகம் வலுவாக இருக்கும் போது அவர் ஆன்மீகம், துறவு, தியானம், மர்மமான விஷயங்களில் மீது மிகவும் ஆர்வம் காட்டுவார். அந்த நபர் உலக பற்றுகளிலிருந்து விலக தொடங்குவார்.
பலவீனமான அல்லது அசுபமான நிலையில் கேது இருந்தால் அவர் தனிமை, குழப்பம், முடிவெடுக்க இயலாத நிலை மற்றும் மனதில் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு அதிகமாக இருக்கும்.
கேது தசை + சுக்கிரன் புத்தி காலம்
1 ஆண்டு 2 மாதங்கள் வரை கேது தசை + சுக்கிரன் புத்தி காலம் நடக்கும்.
செல்வம் சேர்த்தல், அறிவு, ஆற்றல் பெருகக்கூடிய காலமாக இருக்கும். இந்த காலத்தில் சுகபோகத்திற்கும், ஆன்மீகத்திற்கும் இடையில் போராட்டமான காலமாக இருக்கும். கலை, அழகு, வாகனம் வாங்கு, சொ மிதின், நிதி ஆதாயங்கள் வெளிநாட்டு பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. கேதுவும் சந்திரனும் பாதிக்கப்பட்டு இருந்தால் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள், உங்களுடைய குண நலனில் மாற்றம், தேவையற்ற செலவுகள் மற்றும் கண் வலி தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கேது தசை + சூரியன் புத்தி காலம்
நான்கு மாதம் ஏழு நாட்கள் நடக்கும் கேது தசை, சூரிய புத்தி நடக்கக்கூடிய காலத்தில் ஒருவர் சுயமரியாதை மீது அதிகம் ஆர்வம் காட்டுவார். உபதேசம், அதிகாரம் ஒன்று விஷயங்களில் ஈடுபடுவார். அந்த நபருக்கு சூரியன் வலுவாக இருந்தால் அந்த காலத்தில் திடீர் பதவி உயர்வு, நிர்வாக பலன்கள், தந்தையின் ஆதரவு மற்றும் பணியிடத்தில் மரியாதை கிடைக்க கூடியதாக இருக்கும்.
அதே சமயம் கேதுவோ அல்லது சூரியனோ பலவீனமாக இருந்தால் அவருக்கு மரியாதை இழப்பு, தந்தையின் உடல் நல பாதிப்பு தொடர்பான கவலை, அரசாங்க விஷயங்களில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.
கேது தசை + சந்திரன் புத்தி காலம்
ஒருவருக்கு ஏழு மாதங்கள் கேது தசா, சந்திரன் புத்தி நடக்கும் காலத்தில் ஒரு நபர் மனரீதியாக உணர்ச்சிமிக்க நபராகவும், கொந்தளிப்பான காலமாகும் அமையலாம். இந்த காலத்தில் தீமைகள் வந்தாலும் தானாக விலகக் கூடிய காலமாக இருக்கும்.
ஒரு நபருடைய ஜாதகத்தில் சந்திரன் உச்சத்தில் அல்லது சுப இடத்தில் இருந்தால் அவருக்கு மன அமைதி, குடியரசு தொழிலில் வெற்றி கிடைப்பது மற்றும் தாயின் மூலம் நன்மைகள் என அற்புத பலனை தருவார்கள்.
அதுவே சந்திரன் பலவீனமாக இருக்கும்போது அந்த நபருக்கு மன அமைதியின்மை, தேவையற்ற பயம் பதற்றம், மன அழுத்தம், சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கேது தசை + செவ்வாய் புத்தி காலம்
மாதங்கள் 27 நடக்கும் கேது தசை, செவ்வாய் புத்தி காலத்தில் ஒருவருடைய ஆற்றல் அதிகமாக இருக்கும். அதே சமயம் ஆக்ரோஷமாகவும், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய காலமாக அமையும். போறாத காலமாக இருக்கும்.
செவ்வாய் சாதகமான பலன் தரக்கூடிய நிலையில் இருந்தால் அவருக்கு வீடு, நில அல்லது அசையா சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைப்பது மற்றும் எதிரிகளை சமாளித்து வெற்றி பெறுவது என நன்மைகள் கிடைக்கும்.
அதே சமயம் செவ்வாய் அசுபமாக என நிலையில் இருந்தால் அவர் கவனக்குறைவால் ஏற்படக்கூடிய விபத்துகள் சந்திக்க நேரிடும். சகோதரருடன் தகராறு, அர்த்தம் தொடர்பான கோளாறு ஏற்படலாம். கோபத்தால் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
கேது தசை + ராகு புத்தி காலம்
1 ஆண்டு 18 நாட்கள் வரை நடக்கக்கூடிய கேது தசா + ராகு புத்தி காலத்தில் மிகவும் மரணமான மற்றும் குழப்பமான காலமாக இருக்கும். நல்ல செயல்கள் எதுவும் நடக்காது.
கேது சாதகமான இடத்தில் இருந்தால் அவருக்கு திடீரென பெரிய மாற்றங்கள் நல்லது வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நன்மைகள் கிடைக்கலாம்.
அதுவே சுகமான நிலையில் இருந்தால் அதீதமான குழப்பம், பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலாத நிலை மற்றும் பொருள் ஆசை அதிகரிக்கும். தனிமையான சூழலால் கடினமான போராட்டத்தை சந்திப்பார்கள்.
கேது தசை + குரு புத்தி காலம்
11 மாதம் 6 நாட்கள் மறை நடக்கக்கூடிய கேது தசை + குரு புத்தி காலத்தில் திருமணம் நடைபெறும். செல்வம் சேர்வது, குருவின் உபதேசம் கிடைப்பது போன்ற நன்மை வாய்க்கக் கூடிய காலமாக இருக்கும். அறிவு பெருகக்கூடியதாகவும், ஆன்மீகத்தின் மீது நாட்டமும் ஏற்படும். பெற்றோர், குருவிடமிருந்து ஆசிர்வாதம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியும், வாழ்க்கையில் சிலரின் சரியான வழிகாட்டுதலை கிடைக்கப்பெறுவார்கள். செல்வம், மரியாதையும் அதிகரிக்கும்
கேது தசை + சனி புத்தி காலம்
1 ஆண்டு 1 மாதம் 9 நாட்கள் வரை நடக்கக்கூடிய கேது தசை + சனி புத்தி காலத்தில் பொதுவாக இடம் மாறுவீர்கள். உடல் நோய் வந்து விலகும்.
சனி சாதகமாக அமைந்திருந்தால் உபதேச காலமாகவும், கடின உழைப்பால் செயல்களில் வெற்றி, உங்களுடைய வாழ்க்கையில் தூய்மைப்படுத்துதல் போன்ற விஷயங்கள் நடக்கும். ஒழுக்கமான உழைப்பால் நீண்ட கால நன்மைகளையும், நிலைத்தன்மையான செல்வத்தை பெறுவார்கள்.
அதுவே சனி ஜாதகமற்ற நிலையில் இருந்தால் சவால்கள் அதிகரிப்பதும், வேலையில் தடை ஏற்படுவது, மன அழுத்தமும், மூட்டு வலியும் அதிகரிக்கும்.
கேது தசை + புதன் புத்தி காலம்
11 மாதம் 27 நாட்கள் ஒரே நடக்கக்கூடிய கேது தசை+ புதன் புத்தி காலத்தில் பொதுவாக பகை , கல்வி பாதியில் நிற்கும். எண்ணிய செயல் நடந்தேராது.
புதன் வலுவான நிலையில் இருந்தால் அவருக்கு பேச்சில் சாமர்த்தியம், படிப்பு, எழுத்து, வணிகம், புதிய திட்டங்கள் மூலம் வெற்றி கிடைக்கும்.
புதன் சாதகம் அற்ற நிலையில் இருந்தால் முடிவெடுப்பதில் குழப்பமும், சிறிய அளவில் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் சந்திப்பார்கள்.
