Kilambakkam Bus Terminus Name Change: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பெயர் மாற்ற வதந்திக்கு சிஎம்டிஏ முற்றுப்புள்ளி! – kilambakkam bus terminus name change cmda denies viral social media rumors

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் வதந்தியே என்று சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) தெளிவாக மறுத்துள்ளது

சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தமிழ்நாடு ஃபேக்ட் செக் (TN Fact Check) தளம் இந்த வதந்தியை ஆதாரங்களுடன் மறுத்துள்ளது.

வாட்ஸ்அப் மற்றும் எக்ஸ் தளங்களில் பரவிய வதந்தி

கடந்த சில தினங்களாக முகநூல், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவியது. அதில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயர் பண்டிதர் அயோத்திதாசர் நவீன பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது” என்று ஒரு போலிச் செய்தி பகிரப்பட்டது.முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்டு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்’ எனப் பெயரிடப்பட்ட இந்த நிலையத்தின் பெயர் திடீரென மாற்றப்படுவதாக வெளியான தகவல், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

சிஎம்டிஏ (CMDA) கொடுத்த அதிரடி விளக்கம்

இந்தத் தகவல் சமூக ஊடகங்களில் எல்லை மீறிச் சென்றதைத் தொடர்ந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நிர்வகித்து வரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) களமிறங்கியது.இதுகுறித்து சிஎம்டிஏ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ மறுப்பில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றம் செய்ய இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப்புறம்பானது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றும் எண்ணமோ அல்லது அதற்கான ஆலோசனைகளோ அரசிடம் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என அரசு எச்சரிக்கை

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்புக் குழுவான ‘TN Fact Check’ இந்தச் செய்தியைப் பகிர்ந்து, பொதுமக்கள் யாரும் இத்தகைய ஆதாரமற்ற போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.அரசு திட்டங்கள் அல்லது பொது உள்கட்டமைப்புகள் குறித்து பரப்பப்படும் வதந்திகள் பொது அமைதியைக் கெடுக்கும் என்பதால், அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்புகள் வெளியாகும் வரை எதையும் பகிர வேண்டாம் எனத் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Source link