மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது கிருஷ்ண அவதாரம். மிக எளிமையாக, சாதாரண மக்களோடு மக்களாக வாழ்ந்து, தனது வேங்குழல் இசையால் அனைத்து உயிர்களுக்கும் தனது கருணையை மழையாக பரமாத்மா வழங்கியது கிருஷ்ண அவதாரத்தில் தான். அதே போல் மனிதன் முறையாக வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளை எந்த காலத்திற்கும் பொருந்தும் வகையிலான கருத்துகளுடன் கீதையாக எடுத்துரைத்ததும் கிருஷ்ண அவதாரத்தில் தான்.
கிருஷ்ணர் தற்போதும் கடலுக்கு அடியில் வாழ்ந்து வருவதாகவும், அங்கு கடலுக்குள் மூழ்கிய மதுரா நகரின் ஒரு பகுதியை ஆட்சி செய்து வருவதாகவும் நம்பப்படுகிறது. கிருஷ்ணர் தவழ்ந்து, ஓடி ஆடி விளையாடிய பிருந்தாவன், அவர் ஆட்சி செய்த மதுரா ஆகிய நகரங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக ஊரே விழாக் கோலம் பூண்டுள்ளன.
கிருஷ்ண ஜெயந்தி 2026 :
கிருஷ்ணரின் அவதார தினமான கிருஷ்ண ஜெயந்தி விழா இந்த ஆண்டு செப்டம்பர் 04 ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக இந்த நாளில் மக்கள் ஆடிப்பாடி, விளையாடி, குதூகலமாக கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே போல் கொண்டாடுவதற்கு நாடே தயாராகி வருகிறது. பகவான் கிருஷ்ணரின் அருள் அனைவருக்கும் கிடைக்க அனைவருடனும் கிருஷ்ண ஜெயந்தி விழா வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
