kuladeivam worship for debut கடன் தொல்லையில் இருந்து விடுபட குலதெய்வத்தை இப்படி வழிபடுங்க

கடன் பிரச்சனையால் பாதிக்கப்படாதவர்களே இன்றைய காலகட்டத்தில் இருக்க முடியாது. எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் கடனை அடைக்க முடியவில்லை, கடன் தொல்லை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பவர்கள் குலதெய்வத்திற்கு எளிய பரிகாரங்களை செய்வதால் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். குலதெய்வ வழிபாடு என்பது எளிமையான வழிபாடாக இருந்தாலும் அது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது. கடன் பிரச்சனை தீர குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நாம் இந்த பிறவியில் அனுபவிக்கும் துன்பங்கள் மட்டுமல்ல, கடன், நோய் போன்றவையும் முந்தைய பிறவியில் செய்த பாவங்களின் விளைவாகவே ஏற்படுகிறது என இந்து மத சாஸ்திரம் சொல்கிறது. கடந்த பிறவியில் செய்த தவறுகளால் இந்த பிறவியில் ஏற்பட்ட கடன் தொல்லைகளில் இருந்து மீள குலதெய்வத்திற்கு எளிய வழிபாடுகள் செய்து வழிபட்டாலே விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. கடன் தொல்லையில் இருந்து விடுபட எத்தனையோ கோவிலுக்கு சென்று, பரிகாரம், பிரார்த்தனை என செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்பவர்கள் குலதெய்வத்திற்கு இந்த ஒரு எளிய பிரார்த்தனையை செய்து பார்க்கலாம்.

குலதெய்வத்தின் அருள் :

குலதெய்வத்தின் அருள் இருந்தால் மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்கும் என்பார்கள். குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் நாம் எத்தனை கோவிலுக்கு சென்று, எத்தனை விரதங்கள் இருந்து, பரிகாரங்கள் செய்து, வேண்டிக் கொண்டாலும் அந்த தெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்காது என ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. அதனால் குலதெய்வத்தின் அருளை பெறுவது மிகவும் அவசியமானதாகும். குலதெய்வத்தின் அருள் இருந்தால், நாம் எப்படிப்பட்ட துன்பங்களில் இருந்தும் மீண்டு வரலாம். அதனால் எந்த தெய்வத்திடம் வேண்டியும், பரிகாரம் செய்தும் பலன் கிடைக்காதவர்கள் குலதெய்வத்தின் அருளை பெற இந்த வழிபாட்டினை செய்யலாம்.

கடன் தொல்லை தீர வழிபாடு :

1. தொடர்ந்து மூன்று பெளர்ணமி நாளில் குலதெய்வ வழிபாடு செய்து வந்தால் கடன் தொல்லை படிப்படியாக குறையும். கடனை விரைவில் அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். வருமானம் வருவதற்கான புதிய வாய்ப்புகள் திறக்கும். பெளர்ணமி நாளில் குலதெய்வத்திற்கு சர்க்கரை பொங்கல் வைத்து, விளக்கேற்றி வழிபடலாம். குலதெய்வத்திற்கு பெளர்ணமி அன்று அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் செய்து வழிபட்டால் குடும்பத்தில் செழிப்பு உண்டாகும். வருமானம் உயரும்.
2. குலதெய்வம் கோவில் அருகில் இல்லாமல் தூரத்தில் வசிப்பவர்கள், அவர்களின் வீட்டில் குலதெய்வம் போட்டோவை வைத்து அல்லது குலதெய்வம் உள்ள ஊர் திசையை பார்த்து ஐந்து முக நெய் விளக்கு ஏற்றி, ஒன்பது பெளர்ணமி நாட்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் கடன் சுமை குறையும்.உங்களுக்கு வரவேண்டிய பாக்கி இருந்தாலும் வசூலாகி விடும்.

இது தவிர தினமும் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு, வீட்டில் தனியாக ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து, “குலதெய்வத்தை வீட்டில் எழுந்தருளி அருள் புரிய வேண்டும். கஷ்டங்கள் அனைத்தையும் போக்கிட வேண்டும்” என்று மனதார வேண்டிக் கொள்ளலாம். குலதெய்வத்தின் பெயரை 11 முறை அல்லது 27 முறை சொல்லி நம்முடைய வேண்டுதல்களை சொல்லியும், அருள் தர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளலாம். இதனால் வீட்டில் இருக்கும் கடன் பிரச்சனைகள் மட்டுமின்றி சுபகாரிய தடைகள், சண்டை சச்சரவுகள், நிம்மதியின்மை போன்ற பிரச்சனைகளும் விலகி, நன்மைகள் அதிகரிக்க துவங்கும்.

Source link