இரு படங்களையும் சாதனைகளையும் முறியடிக்குமா ஜனநாயகன்
Leo மற்றும் GOAT படங்களின் முன்பதிவு எண்ணிக்கையை விட ஜனநாயகன் படம் பின் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படத் துறை தரவுகளைக் கண்காணிக்கும் சாக்னில்க் ((Sacnilk)) அமைப்பின்படி, இப்படம், ஒதுக்கப்பட்ட இருக்கைகள் உட்பட உள்நாட்டு அளவில் முதல் நாள் முன்பதிவில் 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்த எண்ணிக்கை இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூல் அளவுகளில் ஒன்றாக இருந்தாலும், விஜய்யின் முந்தைய படங்களின் சாதனைகளை விட இது குறைவாகவே உள்ளது. GOAT வெளியீட்டிற்கு முந்தைய உள்நாட்டு முன்பதிவு மூலம் ரூ. 29.83 கோடியையும், லியோ’ தனிப்பட்ட முறையில் ஒதுக்கப்பட்ட இருக்கைகள் நீங்கலாக 46.36 கோடியை வசூலித்து இருந்தது குறிப்பிடதக்கது.
டாக்ஸிக் படத்தின் தடுமாறுதே பாடல் வெளியாகி இணையத்தில் வைரல்
டாக்ஸிக் படத்தின் தடுமாறுதே பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ராக்ஸ்டால் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தின் முதல் பாடலான தபாகி ஆக்ஷன் பாடல் தந்த அதிரடியான வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.
பாடலில் யாஷ் மற்றும் தாரா சுதாரியா கெமிஸ்ட்ரி ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளது. தமிழில் விக்னேஷ் சிவன் எழுதிய இப்பாடலை சித்தார்த் பஸ்ரூர் பாடியுள்ளார்.
