இன்று மதியத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி தனது போராட்டத்தினை, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் இருந்து தொடங்கியது. அவர் வீட்டில் கூடிய காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து பிரதமர் வீடு உள்ள , லோக் கல்யாண் மார்க்கை நோக்கி பேரணியாக செல்லத் தொடங்கினர். இந்த பேரணியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டு , மத்திய அரசுக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பினர்.
இந்த பேரணியின் பொழுது மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரியது மட்டுமல்லாமல் , உள்துறை அமைச்சர் அமித் ஷா , பிரதமர் நரேந்திர மோடி , தலைமை நீதிபதி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.
இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்த டெல்லி காவல்துறையினர் , போராட்டக்காரர்கள் வரம்பினை மீறி கடும் வன்முறையான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதாகவும், அரசு வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் உள்பட 118 காவலர்கள் காயமடைந்ததாக கூறியுள்ளனர். இந்த போராட்டத்தினால் டெல்லி மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது
