ஆவணி மாதத்திலே வரக்கூடிய பௌர்ணமி தினத்தில், இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் நிகழ்வு உள்ளது. இந்த ஆவணி மாதத்தில் ஏற்படக்கூடிய சந்திர கிரகணத்தின் போது சில ராசிகளுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடம். அவை எந்தெந்த ராசிகள், இதில் கவனமாக இருக்க வேண்டும் என்று விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஆவணி 2026 பௌர்ணமி திதி ஆகஸ்ட் 28ஆம் தேதி வியாழன் கிழமை அன்று நிகழவுள்ளது. இந்த நாளில் கும்ப ராசியில் சந்திரன், சிம்ம ராசியில் சூரியன் மற்றும் நிழல் கிரகமான கேது இணைந்து சஞ்சரிக்க உள்ளனர். மேலும் சூரியன் மற்றும் சந்திரனிலேயே பூமி நேர்க்கோட்டில் வருவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.இந்த நிகழ்வு எந்தெந்த பகுதிகளில் தெரியும், எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம்.
ஆண்டின் இறுதி சந்திர கிரகணம்
ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்நிகழ்வு உள்ள கிரகணம் இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் ஆகும். மேலும் இந்த பௌர்ணமி நாளில் ஆவணி அவிட்டம் மற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த சந்திர கிரகணத்தின் போது நிலவின் சுமார் 96 சதவீதப் பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்பட உள்ளது. இந்த சந்திர கிரகணத்தின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளையும் பாதிக்கப்படும். சந்திரனின் அமைவு சில குறிப்பிட்ட ராசிகளுக்கு சாதகமற்ற பலனை தரக்கூடியதாக இருக்கும். இந்த சந்திர கிரகணம் குறித்த ஐந்து முக்கிய விஷயங்கள் இங்கு தெரிந்து கொள்வோம்.
சந்திர கிரகணம் எப்போது, எந்த ராசியில் தொடங்கும்?
சந்திர கிரகணம் எப்போது தொடங்கும்?
இந்திய நேரப்படி ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி காலை 6:53 மணிக்குத் தொடங்கி மதியம் 12:32 மணிக்கு முடிவடைய உள்ளது. கிரகண கால அளவு 5 மணி நேரம் 39 நிமிடங்கள் வரை நீடிக்க உள்ளது.
எந்த ராசியில் சந்திர கிரகணம் நிகழப் போகிறது?
ஆகஸ்ட் 28ஆம் தேதி கிரகணம் நிகழக்கூடிய 6.53 மணிக்கு சர்ப்ப கிரகமான ராகு சஞ்சரிக்கும் கும்ப ராசியில் உள்ள சதய நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிப்பார். அதே சமயம் சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் கேது உடன் சேர்ந்திருப்பார்.
இந்தியாவில் சந்திர கிரகணம் தெரியுமா?
இந்தியாவில் சந்திர கிரகணம் தெரியுமா?
இந்திய நேரப்படி காலை 6.53 மணிக்கு இந்த சந்திர கிரகணம் தொடங்குவதால் இந்த கிரகணத்தை இந்தியாவில் காண இயலாது. கிரகணம் தென்படாத இடங்களில் சூதகாலமும் செல்லுபடி ஆகாது. அதன் காரணமாக அன்று கொண்டாடப்படக்கூடிய ரக்ஷா பந்தன் பண்டிகையையும், ஆவணி அவிட்டம் நிகழும் தங்கு தடை இன்றி கொண்டாட முடியும்.
சந்திர கிரகணம் எந்தெந்த நாடுகளில் தெரியும்?
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்கா கண்டங்களிலும் உள்ள நாடுகளில் தெரியும். மேலும் இந்த கிரகணத்தின் முழு நிகழ்வை வட மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் நன்றாக காண இயலும்.
எந்தெந்த ராசிகளுக்கு பாதகமான விளைவு தரும்
சந்திர கிரகணத்தின் தாக்கம் எந்தெந்த ராசிகளுக்கு பாதகமான விளைவு தரும்
சந்திர கிரகணத்தை காண இயலாது இந்தியாவில் ராசிகள் மீதும் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்துவதாக கருதப்படுவதில்லை. நம் இந்த கிரகணம் நிகழும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் சிம்மம், விருச்சிகம், மகரம் மற்றும் கும்ப ராசிகளுக்கு அந்த காலகட்டத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் முற்றிலும் உண்மையானவை அல்லது துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. விரிவான தகவல்களுக்கு, தயவுசெய்து தொடர்புடைய துறையைச் சேர்ந்த நிபுணரை அணுகவும்.
