Mars Transit In Mrigashira Nakshatra,மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி: எந்த ராசிகளுக்கு சாதகமான மாற்றங்கள் பெறுவார்கள்? – mars enters mrigashira nakshatra: zodiac signs likely to experience positive changes in the next 20 days

ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்து வரக்கூடிய செவ்வாய் பகவான் ஜூலை 24ஆம் தேதி, அவரின் ஆதிக்கம் கொண்ட மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். இவர் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த காலத்தில் செவ்வாயின் அருளால் சில ராசிகளுக்கு அற்புதமான காலம் ஆகும், செயல்கள் வெற்றியடையவும் நல்ல வாய்ப்புகள் ஏற்படும்.

ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் நவகிரகங்களின் தளபதி என அழைக்கப்படுகின்றார். தற்பொழுது ரிஷப ராசியில் சந்தித்து வரக்கூடிய இவர், அவருடைய ஆளுமை நிறைந்த மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ஜூலை 24ம் தேதி பயணிக்க தொடங்க உள்ளார். பொதுவாக ரிஷப ராசி செவ்வாய் மிருகத்திற்கு சம ஸ்தானமாக இருந்தாலும், அவருடைய ஆளுமை நிறைந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் மிக சிறப்பான பலன்களை தருவார். அந்த விதத்தில் மேஷம், கடகம் உள்ளிட்ட ராசிகளுக்கு நன்மைகளை வாரி வழங்க உள்ளார்.

மேஷ ராசிக்கு செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி தரும் பலன்கள்

மிருகசீரிட நட்சத்திரத்திற்குள் செவ்வாய் சஞ்சரிக்கக் கூடிய காலத்தில், உங்கள் ராசிக்கு பெரிய அளவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் சந்திப்பீர்கள். நீங்கள் வேலை, தொழில் தொடர்பாக எதிர்பார்த்த வளர்ச்சியை பெறுவீர்கள். பிள்ளைகளுடன் உறவு வலுவடையும். வணிகம் தொடர்பாக லாபமும், நிதிநிலை அதிகரிப்பதற்கான நல்ல சூழலும் இருக்கும்.

கடக ராசிக்கு செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி தரும் பலன்கள்

கடக ராசி அன்பர்களுக்கு இந்த காலத்தில் உங்களுடைய குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடினமான சூழ்நிலை கூட மனம் தைரியத்துடன் இவர்கள். வணிகம் சார்ந்த நிதி சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். மேலும் உங்கள் திறமைக்கான வாய்ப்புகளையும், லாபத்தை அடைவீர்கள். இந்த காலத்தில் வேலை நிமித்தமான பயணங்கள் செல்ல வேண்டியது இருக்கும். சிலருக்கு கல்வி, வேலை தொடர்பான வெளியூர் வெளிநாடு பயணங்கள் செல்வார்கள்.

விருச்சிக ராசிக்கு செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி தரும் பலன்கள்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு சப்தம ஸ்தானத்தில் ராசி அதிபதி செவ்வாய், தன்னுடைய ஆளுமை நிறைந்த மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைவதால், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், சில மங்களகரமான நிகழ்வுகளும் நடக்கும். குறிப்பாக சில நாட்களாக உங்களுக்கு தொடர்ந்து வந்த சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தீர்வுகள் கிடைக்கும். மகிழ்ச்சியான சில பயணத்திட்டங்களை திட்டமிடுவீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். மேலும் உங்கள் மன தைரியத்தை அதிகரிக்கும் விதத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையின் அன்பையும் ஆதரப்பையும் பெறுவீர்கள். குடும்ப பிரச்சினைகள் குறையும், குடும்ப உறவுகள் வலுவடையும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் முழுமையானவை அல்லது துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. விரிவான தகவல்களுக்கு, தயவுசெய்து தொடர்புடைய துறையைச் சேர்ந்த நிபுணரை அணுகவும்.

Source link