Mercury Venus Conjunction Yoga 2026,லட்சுமி நாராயண ராஜயோகம் 2026: மேஷம், கடகம், துலாம், கும்ப ராசிகளுக்கு செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும் – lakshmi narayan rajyoga 2026: aries, cancer, libra and aquarius may see growth in wealth and influence

Lakshmi Narayan Yoga Benefits : ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் மிக முக்கியமான யோகங்களில் ஒன்று லட்சுமி நாராயண ராஜயோகம். செப்டம்பர் 26ஆம் தேதி புதன் பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இதன் காரணமாக அங்கு ஏற்கனவே ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்து வரக்கூடிய சுக்கிரனுடன் புதன் இணைவதால் லட்சுமி நாராயண யோகம் உருவாக்கிறது. இந்த கிரகங்களின் பார்வை மற்றும் யோக அருள் காரணமாக மேஷம், துலாம், கடகம், மற்றும் கும்பம் உள்ளிட்ட ராசிகளுக்கு தொழிலில் முன்னேற்றம் மற்றும் நிதிநிலை ஆதாயங்கள் பெறக்கூடிய நல்ல வாய்ப்புகள் அமையும்.

செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், அதாவது செப்டம்பர் 26ஆம் தேதி புதன் பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே சந்திருக்கக் கூடிய சுக்கிரனுடன் இணைவதால் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. புதன் அறிவு, திறமை உள்ளிட்டவற்றை தரக்கூடியவர். இவர் செல்வம், சுகபோகங்கள், வசதிகளை தரக்கூடிய சுக்கிரனுடன் இணைவதால் சில ராசி சேர்ந்த அன்பர்களுக்கு தொழில், வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். அதன் மூலம் உங்களுடைய நிதிநிலை தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நவம்பர் 6ஆம் தேதி வரை இந்த அற்புத யோகம் பலனை தரவுள்ளது.

மேஷ ராசி

மேஷ ராசி அன்பர்களுக்கு சம சப்தம ஸ்தானத்தை உருவாக்கக்கூடிய லட்சுமி நாராயண யோகம் உங்களுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை உங்களுடைய நிதி சார்ந்த விஷயங்களை சாதகமான நல்ல மாற்றங்களை கொண்டு வரும்.

தொழில் செய்யக்கூடிய அன்பர்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் பயனடைவீர்கள். மேலும் தொழிலை விரிவு படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுப்பதால் நல்ல பலன் கிடைக்கும். இந்த காலத்தில் புதிய வருமானம் மற்றும் முன்னர் செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைப்பது என நீங்கள் எதிர்பார்க்கலாம். அதே சமயம் புதிய முதலீடு சார்ந்த விஷயங்களிலும் அவசரப்பட வேண்டாம்.

கடக ராசி

கடக ராசி அன்பர்களுக்கு பலவிதத்தில் நன்மை தரக்கூடியதாக இந்த லட்சுமி நாராயண யோகம் அமையும். நீங்கள் செய்யக்கூடிய வேலையை மாற்ற நினைத்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். மேலும் நீங்களும் மேற்கொள்ளக்கூடிய திட்டங்கள் நல்ல பலனைத் தரும். பணியிடத்தை மேலதிகாரிகள் ஆதரவு, பாராட்டு கிடைக்கப்பெறுகிறீர்கள். லாபம் வீட்டுவதற்காக நீங்கள் இருக்கக் கூடிய முயற்சிகள் நன்மை தரும். நிதிநிலை வலுவடையும்.

துலாம் ராசி

துலாம் ராசி நண்பர்களுக்கு உங்கள் ராசியில் உருவாக கூடிய லட்சுமி நாராயண யோகம் பல விதத்தில் உங்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும். உங்களுடைய முயற்சி நல்ல பலன்கள் தரக்கூடியதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு அல்லது சிறந்த வாய்ப்புகள் பெறுவார்கள். தொழில் தொடர்பான விஷயங்களில் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டணி அமைய வாய்ப்புகள் உண்டு. மேலும் உங்களுடைய மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதிநிலை வலுவடைவதற்கான புதிய வழிகள் திறக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசி அன்பர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் உருவாகக் கூடிய லட்சுமி நாராயண யோகம் உங்களுடைய தொழில் மற்றும் வருமானம் தொடர்பாக சுப பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் புதிய பொறுப்புகள் பெற வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பாக புதிய திட்டங்கள் உங்கள் வாடிக்கையாளர்களை கவரக்கூடியதாக இருக்கும். பணியிடத்தில் எங்களுடைய நற்பெயர் உயரும். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கக் கூடிய நிதி விவகாரங்களில் சாதகமான முடிவுகளை பெறுவீர்கள்.

எந்த முயற்சிகள் அதிக பலனைத் தரும்?

ஜோதிட நம்பிக்கை படி புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை சுகமான பலனை தரக்கூடிய யோகத்தை உருவாக்கும். குறிப்பாக இந்த காலத்தில் உங்களுடைய வேலை, தொழில், நிதி நிலை, வர்த்தகம், குடும்பப் பொறுப்புக்கள் சார்ந்த விஷயங்களை சாதகமான பலன்கள் கிடைக்கும். நன்மையை அதிகமாக தரக்கூடிய யோகம் இருப்பதால் உங்கள் முயற்சிகளை அதிகப்படுத்தவும்.

இருப்பினும், ஜோதிடக் கணிப்புகள் நம்பிக்கை மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை. ராசி பலன்கள் அல்லது ராஜயோகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பெரிய முதலீடுகள் அல்லது நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கக்கூடாது.

Source link