இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இந்த சமயத்தில் திருப்பூரில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பரப்புரை செய்து வருகின்றார். அந்த பரப்புரையில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியை சந்தித்ததை பாட்டு பாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுகுறித்து அவர் பேசியது என்னவென்றால், நேற்று இந்தியாவிலேயே மாபெரும் அரசியல் திருப்பத்தை நாம் ஏற்படுத்தினோம். அந்த மகிழ்ச்சியோடு தான் நான் இங்கே வந்துள்ளேன்.
இந்த நேரத்தில் எனக்கு சூப்பர்ஸ்டாரின் ஒரு பாட்டு தான் நினைவிற்கு வருகின்றது. என்கிட்டே மோதாதே, நான் ராஜாதி ராஜனடா என்ற பாடல் தான் எனக்கு நினைவிற்கு வருகின்றது. அந்த பாட்டை நான் கொஞ்சம் மாற்றி பாடலாம் என இருக்கேன். என் கிட்ட மோதாதே, இது பெரியாரின் தமிழ்நாடு டா, வம்புக்கு இழுக்காதே, இது அண்ணாவின் கோட்டையடா, இனி தப்பாட்டம் என்னோடு ஆடாத என ரஜினி பட பாடலை அப்படியே மாற்றி பாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் முக ஸ்டாலின்.
மேலும் பேசிய அவர், நாமக்கல்லில் பற்ற வைத்த தீ நாடு முழுவதும் பரவியது. அதன் வெப்பம் நேற்று மக்களவையில் அந்த சதி திட்டத்தை முறியடித்தது. நாம் பிடித்த கருப்பு கோடி காவி கோடியை வீழ்த்திவிட்டது. இந்த போரில் நாம் வெற்றிபெற்றுள்ளோம். delimitation என்ற பேராபத்தை முதன் முதலில் எதிர்த்தது நாம் தான். 2023 ஆம் ஆண்டே இதை நாம் உணர்ந்து எதிர்த்தோம். இந்த மசோதாவால் பாதிக்கப்படும் மாநிலத்தின் முதல்வர்களை அழைத்து ஆலோசனை நடத்தி தீர்மானங்களை உருவாக்கினோம்.
தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி தீர்மானம் போட்டோம்.அப்போது சட்டமன்றத்தில் அதிமுகவினர் ஒரு பேச்சு பேசினார்கள். வெளியே சென்று வேறு மாதிரி பேசினார்கள். தற்போது இந்த மசோதா வந்தவுடன் கறுப்புக்கொடி போராட்டத்தை நாம் செய்தோம். ஆனால் அதிமுகவினர், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நன்மை தான் செய்யும் என்கின்றனர். இப்படி சொந்த மாநிலத்திற்கே எதிராக எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவும் செயல்படுகின்றனர் என்றார் முக ஸ்டாலின்.
மேலும் தமிழ்நாட்டை அதிமுகவிடம் இருந்தும் பாஜகவிடம் இருந்தும் நாம் பாதுகாக்க வேண்டும் என உரையாற்றினார் முதலமைச்சர் முக ஸ்டாலின். இந்நிலையில் எதிர்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக காட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவினரையும் முதலமைச்சர் முக ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். பெண்களுக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்த விடாமல் திமுக செய்துவிட்டனர். அதை தற்போது அவர்கள் கொண்டாடியும் வருகின்றனர் என குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு மக்கள் செவிசாய்க்கவில்லை என்றே தெரிகின்றது. தமிழ்நாடு முதலமைச்சரும் திமுகவினரும் இந்த சட்ட மசோதாவை வர விடாமல் செய்தது நல்லது தான் என பெரும்பாலானோர் பேசி வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்ற இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. அநேகமாக சட்ட மசோதா குறித்து தான் பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் மோடியின் கருத்துக்களை எதிர்பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றனர்.
