‘மோடி அரசு நம் நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்திய இந்த தாக்குதல்… சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது கூட பிரிட்டிஷ் அரசு இவ்வளவு தீவிரமாகத் தடியடி நடத்தியிருக்காது. தாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, தாக்குதலை நிறுத்துமாறு மாணவர்கள் காவல்துறையினரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தனர்’ என்று அவர் குற்றம் சாட்டினார்.
கெஜ்ரிவால், ‘Mr.மோடி, இந்த ஜனநாயக நாடு உங்கள் தந்தைக்குச் சொந்தமானது அல்ல. மக்களுக்கே சொந்தமானது. அச்சுறுத்தல்களை விடுப்பதை நிறுத்துங்கள், இல்லையெனில், ஒரு சர்வாதிகாரிக்கு என்ன நடந்தது என்பதை வரலாறு நினைவில் கொள்ளும் வகையில் நாட்டு மக்கள் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பார்கள்’ என்று மிக ஆவேசமாகக் கூறினார்.
மத்திய அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தவறான வழிகளில் ஆட்சி நடத்துவதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் குரல்களையும் நசுக்கப் பார்ப்பதாகவும் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் போது, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற CJP அமைப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறை தடுத்ததைத் தொடர்ந்து மோதல்கள், கைது நடவடிக்கைகள் மற்றும் அதிகப்படியான பலப்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
