இந்த வீக் எண்டில் உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து ஓ.டி.டி-யில் எந்த படம் பார்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காக தான் இந்த பதிவு. இந்த ஞாயிற்றுக்கிழமையை என்ஜாய் பண்ணும் விதமாக ஓ.டி.டி-யில் என்னென்ன படங்கள் வந்திருக்கிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மதுரை, கோவைக்கு ‘நோ’ மெட்ரோ… திட்ட அறிக்கையை மீண்டும் நிராகரித்த மத்திய அரசு
ரோமாஞ்சம்
ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ரோமாஞ்சம்’. இந்த படத்தில் சௌபின் ஷாகிர், செம்பன் வினோத், அர்ஜூன் அசோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மலையாள மொழியில் வெளியான இந்த காமெடி, திரில்லர் திரைப்படத்தை நீங்கள் ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்த்து மகிழலாம்.
தாய் கிழவி
நடிகை ராதிகா சரத்குமார் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘தாய் கிழவி’. இந்த படத்தில் சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன் மற்றும் இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ஜியோ ஹாட் ஸ்டாரில் கண்டு மகிழுங்கள்.
மிடில் கிளாஸ்
முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மிடில் கிளாஸ்’. திருமணமான குடும்பத் தலைவன் என்னென்ன சிக்கல்களையும் பிரச்னைகளையும் சந்திக்கிறார் என்பதை நகைச்சுவையாக இப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மிடில் கிளாஸ்’ திரைப்படத்தை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்.
வாழ 2
’வாழ 1’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான திரைப்படம் ‘வாழ 2’. பள்ளிக் கால கதையாக உருவான இந்த காமெடி திரைப்படம் ரூ. 110 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இந்தத் திரைப்படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் குடும்பத்துடன் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
கெணத்த காணோம்
யோகி பாபு, லவ்லின் சந்திரசேகர், ரைச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், கவிதா பாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘கெணத்த காணோம் ‘. இந்தத் திரைப்படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் பார்க்கலாம்.
குரங்கு பெடல்
கமலகண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘குரங்கு பெடல்’. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர் ராகவன், ஞானசேகர், ரத்திஷ், சாய் கனேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ’குரங்கு பெடல்’ திரைப்படத்தை ஆஹா ஓ.டி.டி-யில் பார்த்து வீக் எண்டை என்ஜாய் பண்ணுங்க.
ஹவுஸ் மேட்ஸ்
இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர் தர்ஷன் நாயகனாக நடித்துள்ள திரைபப்டம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. இந்த படத்தில் நடிகர் காளி வெங்கட் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஃபேண்டெசி கலந்த ஹாரர் காமெடி திரைப்படமாக வெளியான ’ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
பூக்கி
கணேஷ் சந்திரா இயக்கத்தில் நடிகர் அஜய் திஷான், பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பூக்கி’. பிரிவை விரும்பும் நிலையில் இருந்தும் ஒருவரை ஒருவர் இன்னும் நேசித்து கொண்டிருப்பதை உணர்ந்து, குழப்பத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு காதல் ஜோடியின், உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை நகைச்சுவையுடன் இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது. ’பூக்கி’ திரைப்படத்தை ஜீ5 ஓ.டி.டி-யில் பார்த்து வீக் எண்டை என்ஜாய் பண்ணுங்க.
