OTT: பரபரப்புக்கு பஞ்சமில்லை… சீட் நுனியில் அமர வைக்கும் சூப்பர் ஹிட் படங்கள்; இந்த ஓ.டி.டி-யில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

திரையரங்கில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவதை போல, ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 4 வாரங்களில் ஓ.டி.டி தளத்தில் படம் வந்துவிடும் என்பதாலேயே பலர் திரையரங்கில் பார்ப்பதை விட வீட்டில் இருந்து படம் பார்க்க விரும்புகின்றனர். இதன் காரணமாக ஓ.டி.டி தளங்களில் வாரத்தின் அனைத்து நாட்களும் புதுப்புது திரைப்படங்கள் வெப் தொடர்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள சில படங்கள் மற்றும் வெப் தொடர்கள் குறித்து பார்ப்போம். 

தமிழ் படங்கள்

டோரதி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சுமந்த், முத்துகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான படம் டோரதி. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த இந்த படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த படத்தை பார்க்கலாம்.

சட்டமும் நீதியும் சீசன் 2

சரவணன் நடிப்பில் ஜீ 5 தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற வெப் தொடர் சட்டமும் நீதியும். தற்போது இந்த வெப் தொடரின் 2-வது சீசன் வெளியாகியுள்ளது. ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ள இந்த தொடரில் சரவணனுடன் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 

தெலுங்கு படங்கள்

தி பாரடைஸ்

நானி நடிப்பில் வெளியாகி கலவையாக விமர்சனங்களை பெற்றபடம் தி பாரடைஸ். ஆனாலும் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. தெலுங்கு படமான தி பாரடைஸ், தமிழ், கன்னடம், மலையாளம், இந்திய ஆகிய மொழிகளில் பார்க்கலாம். 

நா வைப் மிஸ்ஸிங்

தெலுங்கில் வெளியான தற்போது ஆஹா ஓ.டி.டி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகியுள்ளது. 

மலையாள படங்கள்

தோமகீது

மலையாளத்தில் வெளியான தோமகீது கடந்த செப்டம்பர் 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. டைம் லூப் முறையில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. மலையாளம் மட்டும் இல்லாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படத்தை பார்க்கலாம்.

இந்தியில் தி லெஜண்ட் ஆப் ஹனுமான் (ஜியோ ஹாட் ஸ்டார்), ஆங்கிலத்தில் மோனா (ஜியோ ஹாட் ஸ்டார்), தி இன்வைட் (ஜீ5), பினோசினோ அன்ஸ்ட்ராங் (அமேசான் ப்ரைம்), தி லெஜண்ட் ஆப் வைட் ட்ராகன் (லைன்ஸ் கேட் ப்ளே), லுப்பின் வெப் சிரீஸ் (நெட்ஃபிளிக்ஸ்), ஆகிய படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது.    

Source link