இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மட்டுமின்றி, ஓடிடி தளங்களிலும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாக உள்ளன. அவற்றில் முக்கியமான படங்கள் மற்றும் தொடர்கள் குறித்துப் பார்க்கலாம்.
இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் நாளை (செப். 11) வெளியாகிறது. இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாகவும், நடிகை ராதிகா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
அதேபோல், நடிகர் விஷால், துஷாரா, விஜயன், அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மகுடம்’ திரைப்படமும் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மோகன் ஸ்ரீவத்ஸா இயக்கத்தில், பரத், மேதா ரெட்டி, சிவாஜி ராஜா, சரண் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள குற்ற விசாரணை த்ரில்லர் வெப் சீரிஸுனான பஞ்சநாமா நாளை வெளியாகிறது. 6 எபிசோடுகளைக் கொண்ட இந்தத் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நாதிர்ஷா இயக்கத்தில், விஷ்ணு உன்னிகிருஷ்ணன், அக்ஷயா உதயகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘மேஜிக் மஷ்ரூம்ஸ்’ திரைப்படம், விசித்திரமான காளான்களைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
ஷாஜி கைலாஸ் இயக்கத்தில், ஜோஜு ஜார்ஜ், அர்ஜுன் அசோகன், தீபக் பரம்போல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அதிரடித் திரைப்படம் ‘வரவு’. இப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ராகுல் அசோக் இயக்கத்தில், நடிகை அபர்ணதி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வெஞ்சன்ஸ்’ திரைப்படமும் நாளை வெளியாகிறது. இப்படத்தில் இளவரசு, லிவிங்ஸ்டன், காளி வெங்கட், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் காணலாம்.
மலையாள இயக்குநர் ஷானி காதர் இயக்கத்தில், டெய்ன் டேவிஸ், நிர்மல் பாலாஜி, ஹரிஷ்மா, வித்யா விஜயகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரின்ஸ் ஆஃப் மோலிவுட்’ வெப் சீரிஸும் நாளை (செப். 11) வெளியாகிறது. நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள இந்தத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கடந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள ‘டிசி’ திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படத்தில் நடிகர் மாதவன், ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
கிரண் தாஸ் இயக்கத்தில், குஞ்சாக்கோ போபன் மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் வெளியான மலையாள கிரைம் த்ரில்லர் திரைப்படம் ‘உன்மத்தம்’. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
‘அனந்தன் காடு’ திரைப்படத்தையும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம். இதில் ஆர்யா, முரளி கோபி, நிகிலா விமல், இந்திரன், சுனில், ரெஜினா, தேவ் மோகன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜியேன் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.
அருள்நிதி நடித்த ‘அருள்வான்’ திரைப்படமும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட், ஜான் விஜய், விடிவி கணேஷ், கிருத்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை ரசிகர்கள் தங்களது விருப்பமான ஓடிடி தளங்களில் கண்டு மகிழலாம்.
