PAK vs SL ODI – பாகிஸ்தானை பந்தாடிய இலங்கை அணி: 18.1 ஓவரிலேயே வெற்றி: ஸ்கோர் விபரம் – pakistan team beat sri lanka team by 8 wickets in tri series 2026

பாகிஸ்தானில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி, முதல் அணியாக பைனலுக்கு முன்னேறிய நிலையில், இரண்டாவது இடத்திற்கு இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கடும் போட்டி இருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்றால், இலங்கை அணியும் பைனலுக்கு முன்னேறிவிடும் என்ற நிலைமை இருந்ததால், இப்போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பாகிஸ்தான் இன்னிங்ஸ்: இப்போட்டியில், டாஸை இழந்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில், எந்த பேட்டரும் 30 ரன்னை கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாக, பாபர் அசாம் 33 பந்தில் 5 பவுண்டரி உட்பட 29 ரன்னை அடித்தார். மற்ற எந்த பேட்டரும் பெரிய ரன்களை அடிக்கவில்லை. இறுதியில், பாகிஸ்தான் அணி, 25.3 ஓவர்களில் 110/10 ரன்களை மட்டும் எடுத்து சொதப்பியது.

இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் தில்சன் மதுசங்கா 8.3 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார. மேலும், சஹான் அரச்சிகே 5 ஓவர்களில் 24 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார்.

இலங்கை இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய இலங்கை அணியில், ஓபனர் கமிந்து மெண்டிஸ் சிறப்பாக பேட்டிங் ஆடி, 60 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 62 ரன்களை சேர்த்து அசத்தினார். அவிக்‌ஷா பெர்ணான்டோ 17 பந்தில் 16 ரன்களையும், பவன் ரத்னயாகே 26 பந்தில் 23 ரன்களையும், தங்கள் பங்கிற்கு சேர்த்தனர். இறுதியில், இலங்கை அணி, 18.1 ஓவர்கள் முடிவில் 114/2 ரன்களை எடுத்து, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதன்மூலம், மூன்று போட்டிகளில் 2 வெற்றிகளுடன் இலங்கை அணியும் பைனலுக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி, 3 போட்டிகளில் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. கடைசிப் போட்டியில், இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து வென்றாலும், ஒரு வெற்றியுடன்தான் இருக்கும்.

அடுத்து, கடைசி லீக் போட்டியில் இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதும். இப்போட்டி, அக்டோபர் 29ஆம் தேதி நடைபெறும். இதனைத் தொடர்ந்து, இறுதிப் போட்டி, அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் மோதும்.

அதிக ரன்கள்: இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில், இதுவரை அதிக ரன்களை அடித்த பேட்டராக, இலங்கையை சேர்ந்த பவன் ரத்னயகே 3 போட்டிகளில் 232 ரன்களை அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். ஹேரி ப்ரூக், 3 போட்டிகளில் 208 ரன்களையும், பென் டக்கெட் 179 ரன்களையும் எடுத்து, அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.

இத்தொடரில், இதுவரை அதிக விக்கெட்களை கைப்பற்றிய பௌலராக, பாகிஸ்தானின் அராபட் மின்ஹாஸ் இருக்கிறார். இவர், 4 போட்டிகளில் 9 விக்கெட்களை எடுத்துள்ள நிலையில், ஷஹீன் அப்ரீதி, 4 ஓவர்களில் 8 விக்கெட்களை வீழ்த்தினார். தில்சன் மதுசங்கா, கடந்த போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம், மொத்தம் 7 விக்கெட்களை எடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

இங்கிலாந்துஅணியில், ஜேமி ஓவர்டன், 3 போட்டிகளில் 5 விக்கெட்களை எடுத்துள்ளர். இத்தொடரில், இங்கிலாந்து அணியில், பௌலர்கள் சரியில்லை. இதனால்தான், பைனலுக்கு முன்னேற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link