நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு: நடிகர் இம்ரான் கான் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு

மும்பை: தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் கடந்த அக்.10-ம் தேதி டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக மும்​பையில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் அமெரிக்க குடியுரிமை பெற்ற நடிகர் இம்ரான் கான் பங்​கேற்​றார்.

இது​தொடர்​பாக அவர் மீது எப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்​டதைத் தொடர்ந்து, அக்.28-ம் (இன்​றைக்​குள்) தேதிக்​குள் இந்​தி​யாவை விட்டு வெளியேற வேண்​டும் என வெளி​நாட்​டினர் பிராந்​தி​யப் பதிவு அலு​வல​கம் கடந்த 14-ம் தேதி நோட்​டீஸ் பிறப்​பித்​தது.

இதை எதிர்த்து நடிகர் இம்​ரான் கான் மும்பை உயர் நீதி​மன்றத்தில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி மகேஷ் சி. திரிபாதி மற்​றும் நீதிபதி அத்​வைத் சேத்னா அடங்​கிய அமர்வு முன் நேற்று விசா​ரணை நடைபெற்றது.

இதுதொடர்​பாக மத்​திய அரசின் பதிலைக் கேட்க விரும்​புவ​தாக நீதிப​தி​கள் தெரி​வித்​தனர். இதையடுத்து, சொலி​சிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராக வசதி​யாக அவகாசம் கோரி மனு தாக்கல் செய்​யப்பட்டது. இதையடுத்து, வழக்கு நவ. 2-ம் தேதிக்கு ஒத்தி வைக்​கப்​பட்​டது.

Source link