Purattasi Matha Rasi Palan 2026,புரட்டாசி மாத ராசிபலன் 2026: நிதி நெருக்கடி மற்றும் சவால்களை சந்திக்கக்கூடிய ராசிகள் – purattasi month horoscope 2026: sun transit in virgo these zodiac signs may face financial pressure, challenges

நவ கிரகங்களின் தலைவனான சூரிய பகவான் செப்டம்பர் 17ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7.58 மணிக்கு சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சூரியன் இந்த மாற்றம் சில ராசிகளுக்கு சாதகமற்றதாக இருக்கும். இவருடைய அமைப்பு மற்றும் தாக்கம் நிதி இழப்பு, உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் அல்லது சச்சரவுகளை சந்திக்க நேரிடும்.

செப்டம்பர் 17 ஆம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இந்த ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலத்தை புரட்டாசி மாதம் என அழைக்கப்படுகிறது. சூரியனின் பெயர்ச்சி 12 ராசிகள் மீது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தினாலும், சில ராசிகளுக்கு சிரமங்களை தரக்கூடியதாகவும் இருக்கும். இந்த இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மிதுன ராசி

மிதுன ராசி அன்பர்களுக்கு சுகஸ்தானத்தில் சூரியனின் பெயர்ச்சி ஓரளவு நன்மை தரும். ராசி அதிபதி புதனும் சூரியனும் சேர்ந்து இருப்பதால் உருவாகும் யோகம் உங்களுக்கு கைகொடுக்கும். மற்றபடி உங்களுடைய மனதளவில் கவலையும் சில அழுதங்களும் சந்திக்க நேரிடும். வேலையில் கூடுதல் கவனத்துடனும், சரியான திட்டமிடலும் தேவைப்படும்.
இந்த காலகட்டத்தில் உங்களுடைய பேச்சை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்படவும். வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். முதலீடு மற்றும் புதிய விஷயங்களை செயல்படுத்துவது தொடர்பாக நிதானத்தை கடைபிடிக்கவும். இல்லையெனில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

கடக ராசி

கடக ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் இந்த பெயர்ச்சி உங்களுடைய நிதிநிலை மற்றும் குடும்பம் சார்ந்த விஷயங்களில் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். சிறுசிறு பிரச்சனைகள் உங்களுடைய மன உளைச்சலை அதிகரிக்கும். மேலும் குடும்பத்தினரும் தேவைகளுக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும். இதன் காரணமாக இந்த மாதத்தில் முதல் விஷயமாக நிதி நிலை கட்டுப்பாடு மற்றும் பட்ஜெட் போடுவது நன்மை தரும்.
வேலை தொடர்பான அழுத்தங்கள் சந்திக்க நேரிடும். உங்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்ற நிலை ஏற்படலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் அல்லது வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப விஷயங்கள் தொடர்பாக பெரிய முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது.

சிம்ம ராசி

சிம்ம ராசி அதிபதி ஆன சூரிய பகவான் உங்களுடைய தனஸ்தானத்தை அவர் பெயர்ச்சியாக கூடிய காரணத்தால் உங்களுடைய நிதிநிலை, சேமிப்பு மற்றும் குடும்ப பொறுப்புகள் தொடர்பாக கவனமாக இருக்கவும். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பு அதிகப்படுத்தும். இந்த மாதத்தில் நிதி சார்ந்த திட்டமிடல் இல்லாவிட்டால் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். மேலும் உங்களுடைய முக்கிய வேலைகளை முடிப்பதில் கவனத்துடனும், தீவிரமாகவும் செயல்படுவது அவசியம்.
இந்தக் காலத்தில் சூரியனின் அசுபமான தாக்கங்களை தவிர்க்க, தினமும் காலையில் சூரியன் பகவனை வழிபாடு செய்வதும், சூரிய நமஸ்காரம் செய்வதும் நன்மை தரும். உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து நிதி நிலைமை தொடர்பாக பேசுவதும் பட்ஜெட் போட்டு செயல்படுவதும் நல்லது.

துலாம் ராசி

துலாம் ராசி நண்பர்களுக்கு விரய ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் காரணமாக உங்களுடைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. மேலும் உடல்நல பிரச்சனைகள் தொடர்பாக செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இந்த மாதத்தில் நீங்கள் சோர்வு மற்றும் மன அமைதியின்மை பிரச்சனைகளால் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். அதனால் சரியான நேரத்தில் உங்கள் உடல் மற்றும் மனதிற்கு ஓய்வு கொடுப்பதும், மன அழுத்தத்திலிருந்து விலகி இருப்பது நன்மை தரும்.

உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக நல்ல திட்டங்களை வகுத்து செயல்படுவது உங்களை நம்பிக்கையுடனும் ஆற்றலுடனும் வைத்திருக்க உதவும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய செலவுகளை கட்டுப்படுத்துவது, திட்டமிடுவது நல்லது. சரியான மற்றும் முழுமையான தகவல் இல்லாமல் யாருக்கும் கடன் கொடுப்பது நல்லது முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.

கும்ப ராசி

கும்ப ராசி அன்பர்களுக்கு அஷ்டமஸ்தானத்தில் சூரியனின் பெயர்ச்சி சில சங்கடங்களை தர வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக கூட்டுத் தொழில் செய்யக்கூடியவர்களுக்கு பணியிடத்தில் இணக்கமற்ற சூழல் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பதில் அதிக பொறுப்புடன் செயல்படவும். மேலும் முதலீடு தொடர்பான விஷயங்களில் அனைத்து தகவல்களையும் சரியாக தெரிந்து கொண்ட பின்னரே முடிவெடுப்பது நன்மை தரும்.

குடும்ப விவகாரங்களில் விவகாரங்களில் அதிக பொறுப்புகளை சந்திக்க நேரிடும். மேலும் வேலை தொடர்பான பளு உங்களுடைய வருத்தத்தை அதிகரிக்கும். இந்த மாதத்தில் உங்களுக்கு பிடித்தமான நபர்களை எதிரிகளாக மாற வாய்ப்பு உண்டு. அதனால் உங்கள் பேச்சில் இனிமையே கடைபிடிக்கவும். குழு செயல்பாடுகளில் விட்டுக்கொடுத்து செல்வதும், பிறர் கருத்துக்களை கேட்டு முடிவு எடுப்பது நல்லது.

மீன ராசி

மீன ராசி அன்பர்களுக்கு சம சப்தம ஸ்தானத்தில் சூரியனின் பெயர் எங்களுடைய உறவுகள் மற்றும் கூட்டணிகள் தொடர்பாக முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டியது இருக்கும். தொழிலில் பங்குதாரர் மற்றும் பணியிடத்தில் சக ஊழியர்களிடம் பேசும் போது தெளிவாகவும், கூடுதல் கவனத்துடன் பேசுவது நன்மை தரும். கண்ணியமான பேச்சு உங்கள் உறவுகளை மேம்படுத்தும்.

சூரியனின் அசுப தாக்கம் காரணமாக தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சச்சரவுகளை சந்திக்க நேரிடும். மேலும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

Source link