Rahu In Capricorn Astrology Benefits,மகர ராசியில் ராகு பெயர்ச்சி: டிசம்பர் 5 முதல் ராஜயோகமான பலன்களைப் பெறும் ராசிகள் – rahu transit in capricorn: zodiac signs that may experience prosperity and positive changes from december 5

ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகம், சர்ப்ப கிரகம் என அழைக்கப்படக்கூடிய ராகு, டிசம்பர் 5ஆம் தேதி கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். அதே சமயம் கேது சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இந்த நிழல் கிரகங்களின் மாற்றம் சில ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவை திறக்கப்படும்.

ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் நவகிரகங்களில் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிடத்தக்க குணம் உண்டு. அந்த விதத்தில் சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்படக்கூடிய ராகு மற்றும் கேது பொதுவாக நன்மைகள் தரக்கூடிய கிரகங்கள் அல்ல. ஆனால் அவை அமைந்துள்ள இடம், கிரகங்களின் சேர்க்கை என்ற விஷயங்கள் நல்ல பலன்களை தரக்கூடியதாக இருக்கும். 12 ராசிகள் யாருக்கு நன்மை கிடைக்கும் என தெரிந்து கொள்ளவும்.

ராகு கேதுவின் பெயர்ச்சி தரப்போகும் நன்மைகள்:

வரும் டிசம்பர் 5ஆம் தேதி ராகு மகர ராசிக்கும், கேது கடக ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளனர். ‘திருக் கணித பஞ்சாங்க’த்தின்படி, டிசம்பர் 5, சனிக்கிழமை அன்று மாலை 7:28 மணிக்கு ராகு மகர ராசிக்குள் நுழைவார். சனி பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மகர ராசிக்குள் ராகு நுழைவது, ஜோதிட ரீதியாகச் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதன் காரணமாக சில ராசிகளின் வேலையில் புதிய வாய்ப்புகள், தொழில் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி, நிதிநிலை தொடர்பாக முன்னேற்றம் மற்றும் நீண்ட கால ஆசைகள் நிறைவேறுவது, உங்கள் அர்ப்பணிப்பான செயல்பாடுகள் நன்மைகளை பெறக்கூடியதாக இருக்கும். எந்தெந்த 4 ராசிகள் பலவிதத்தில் நன்மை அடைவார்கள் என தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி

மேஷ ராசி அன்பர்களுக்கு, உங்களுடைய தொழில் ஸ்தானத்தில் ராகுவின் சஞ்சாரம் காரணமாக உங்களுடைய வேலை மற்றும் தொழில் தொடர்பாக குறிப்பிடத்தக்க மாதங்களை காண்பீர்கள். சொந்த தொழில் அல்லது வியாபாரம் செய்யக்கூடியவர்கள் தங்களுடைய புதிய முயற்சிகள் அல்லது யோசனைகள் மூலம் நல்ல மாற்றங்களையும் லாபத்தையும் காண்பீர்கள்.

படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும். மேலும் உங்களுடைய செயல்பாடுகள் பணியிடத்தின் அங்கீகாரத்தை பெற்று தரும். சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களுடைய புத்திசாலித்தனமான சில யோசனைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும்.சிக்கலான சூழ்நிலைகளுக்கு சரியான தீர்வுகளை கண்டுபிடிப்பீர்கள்.

சிம்ம ராசி

சிம்ம ராசி அன்பர்களுக்கு, மகர ராசியில் ராகு சந்தரிக்கும் காலத்தில் பலவிதத்தில் நன்மைகள் தரக்கூடியவர்களாக இருப்பீர்கள். மேலும் உங்கள் ராசியில் இருந்து மற்றொரு நிழல் கிரகமான கேது விலகி உள்ளார். இதன் காரணமாக உங்களுடைய எதிரிகளையும், போட்டியாளர்களையும் வெல்ல முடியும்.

இந்த காலகட்டத்தில் மாணவர்கள் கல்வி தொடர்பாக சிறப்பாக செயல்படுவார்கள் குறிப்பாக போட்டித் தேர்வுக்கு தயாராக கூடியவர்களுக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகம் செய்யக்கூடியவர்களுக்கு எல்லாருக்கும் உயர் பதவிகள் எனது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். உங்களுடைய தைரியம், தன்னம்பிக்கை அதிகரித்து நிதானத்துடன் செயல்படுவதால் வெற்றி உங்களை வந்து சேரும்.

மகர ராசி

ராகுவின் பெயர் மகர ராசியில் நடப்பதாலும், இந்த ராசி நண்பர்களுக்கு பணம் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரக்கூடியதாக இருக்கும். உங்களுடைய கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் விரைவாக கிடைக்கும். கடினமான சூழல்களை சிறப்பாக சமாளிக்க முடியும். துணிச்சலும் மன தைரியமும் அதிகரிக்கும். அதன் காரணமாக உங்களுடைய விடாமுயற்சியை அதிகரிக்கவும். தொழில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியை ஏற்படலாம். வீடு தொடர்பாக சில முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

நீங்கள் செய்யக்கூடிய வேலை அல்லது தொழில் தொடர்பாக கூடுதல் பொறுப்புகளை சுமக்க நேரிடும். மேலும் சில விஷயங்களுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இது எதற்காக லாபத்தை தரக்கூடியதாக அமையும். இந்த காலத்தில் உங்களுடைய பொறுமையும் ஒழுக்கமான செயல்பாடும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அரசியலில் இருப்பவர்கள் தங்களுடைய செல்வாக்கு உயர்த்திக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிர் வெளிநாடு தொடர்பான முழு நிலையில் இருந்து உங்களுக்கு லாபத்தை அடைவீர்கள்.

மீன ராசி

மீன ராசி நண்பர்களுக்கு உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகுவின் பெயர்ச்சி நடக்க உள்ளது. உங்களுடைய நிதிநிலை மற்றும் சமூக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இந்த காலத்தில் உங்களுக்கு புதிய நட்புகள் கிடைப்பார்கள். புதிய மனிதர்களை சந்திப்பது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும், பல்வேறு புதிய யோசனைகளையும் கிடைக்க உதவும். உங்கள் பேச்சின் ஆளுமை திறன் மற்றவர்களை ஈர்க்க கூடியதாக இருக்கும்.

அந்தக் காலத்தில் சொந்த தொழில் செய்யக்கூடியவர்கள் முடிவுகள் எடுப்பதற்கு கவனம் தேவை. மேலும் அரசியல், சமூகப் பணிகளில் இருப்பவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது நிதானத்தை கடைபிடிக்கவும். உங்களுடைய புரிதலுடன் இருக்கக்கூடிய முடிவுகள் எடுப்பது நம்மை தரும்.

குறிப்பு:

இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஜோதிடத் தகவல்கள் மற்றும் தீர்வுகள் ஜோதிடம் மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றிற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இவற்றை நம்பிக்கை மற்றும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே கருத்தில் கொள்ளவும். தனிப்பட்ட ஆலோசனை மற்றும் முழுமையான தகவல்களுக்கு ஜோதிட நிபுணரை அணுகுவது சிறந்தது.

Source link