இந்திய ஒருநாள் அணி ஓபனர் ரோஹித் சர்மா, தற்போது தனியார் தொலைக்காட்சியில் டிவி ஷோ ஒன்றை நடத்த ஆரம்பித்துள்ளார். சோனி என்டர்டைன்மண்ட் டெலிவிஷன் தொலைக்காட்சியில், செப்டம்பர் 19ஆம் தேதி அன்று இரவு 9:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதற்கான புரோமோவை அந்த தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அப்படி ஒரு பிரோமோவில்தான், ரோஹித் சர்மா அணிந்திருந்த டி சர்ட் பெரிய அளவில் கவனத்த பெற்றுள்ளது. அந்த டி சர்டில், ‘உறுதி படுத்தவில்லை’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது தான் கவனத்தை ஈர்த்துள்ளது.
என்ன காரணம்? கடந்த அக்டோபர் மாதம், பேட்டிகொடுத்த இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரிடம், ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடருக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அகார்கர், ‘‘தற்போது, அதனை உறுதிபடுத்த முடியாது’’ என பதில் அளித்துவிட்டு சென்றார். இந்நிலையில், தற்போது, அகார்கர் சொன்ன உறுதிபடுத்த முடியாது (non-Committal) என்ற வாசகம் இடம்பெற்ற டி சர்ட்டைதான், ரோஹித் சர்மா தற்போது அணிந்துள்ளார்.
ரோஹித் ஓய்வுபெற வாய்ப்பு: முன்பு பேட்டிகொடுத்திருந்த ரோஹித் சர்மா, ‘‘ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடரில் ஆடுவதுதான் எனது லட்சியம்’’ எனக் கூறியிருந்தார். ஆனால், தற்போது, ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடரில் ஆட விருப்பமா என்ற கேள்விக்கு, ‘‘ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடர் நடைபெற இன்னமும் அதிக காலம் இருக்கிறது’’ எனக் கூறினார். இதன்மூலம், ரோஹித் சர்மா விரைவில் ஓய்வு அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரோஹித் சர்மாவை புறக்கணிக்கும் முடிவில் பிசிசிஐ இல்லை. ரோஹித் சர்மாவாக, ஓய்வை அறிவித்தால் அதனை பிசிசிஐ ஏற்றுக் கொள்ளுமே தவிர, அவரை புறக்கணிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை, ரோஹித்துக்கு பிசிசிஐ கொடுத்துள்ளதாம்.
ரோஹித் பார்ம்: ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடருக்கு பிறகு, ரோஹித் சர்மா, மொத்தம் 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அதில் 47.44 சராசரியில் 1,186 ரன்களை அடித்துள்ளார்.
2024ஆம் ஆண்டில், இலங்கைக்கு எதிராக 3 போட்டிகளில் விளையாடி, 157 ரன்களை குவித்தார். அடுத்து, 2025ஆம் ஆண்டில், 14 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்த நிலையில், அதில் 650 ரன்களை குவித்து, தனது பார்மை நிரூபித்தார். பிறகு, 2026ஆம் ஆண்டில், இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 379 ரன்களை எடுத்துள்ளார்.
இப்படி, ரோஹித் சர்மா தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி வருவதால், அவரை ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடரில் ஆட வைக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடர் நடைபெறும் தென்னாப்பிரிக்காவில், ஷார்ட் பால்களை எதிர்கொள்ள பேட்டர்கள் தடுமாறுவார்கள். ஆனால், ரோஹித் சர்மாவால், ஷார்ட் பால்களை அபாரமாக எதிர்கொள்ள முடியும். இதனால், இதனை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மாவை, ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடரில் சேர்க்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
