தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில், துவக்கத்தில் இருந்தே அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி, 214 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027 புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்தது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது போட்டி, குயுபெராவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ்: முதலில் கறமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, அபாரமாக செயல்படவில்லை. ஓபனர் எய்டன் மார்க்கரம் 11 (28), டேவிட் பேடிங்கம் 0 (1) ஆகியோர் அடுத்தடுத்த பந்தில் விக்கெட்களை பறிகொடுத்து சொதப்பினார். ஸ்காட் போலாந்துதான் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினார்.
தென்னாப்பிரிக்கா அணி, 12.2 ஓவர்களில் 20/2 ரன்களை எடுத்து விளையாடி வந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. அடுத்து, முதல் நாளில் வேறு ஓவர்களை வீச முடியவில்லை. அடுத்து, 2ஆவது நாளின் துவக்கத்திலும் இதே நிலைமைதான். முதல் செஷனில் மழை பெய்த நிலையில், தற்போது இரண்டாவது செஷனின் போதும் மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, கடைசி செஷனும் மழை காரணமாக ரத்தாக வாய்ப்புள்ளது.
மேலும், கடைசி மூன்று நாட்களிலும் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால், இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிரா ஆகவே அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிரா ஆனால், அது தென்னாப்பிரிக்க அணிக்கு, பெரிய பின்னடைவாக மாறும். அந்த 2ஆவது டெஸ்ட் டிரா ஆனால், தென்னாப்பிரிக்க அணி, 6 போட்டிகளில் 3 வெற்றிகள், ஒரு தோல்வி, ஒரு டிராவை சந்தித்து, 55.56 சதவீத புள்ளிகளை பெற்று, 4ஆவது இடத்திற்கு பின்தங்கிவிடும்.
வங்கதேச அணி, 6 போட்டிகளில், 3 வெற்றி, 2 தோல்வி, ஒரு டிராவை சந்தித்து 55.56 சதவீத புள்ளிகளுடன் இருக்கிறது. இப்படி, தென்னாப்பிரிக்காவும், வங்கதேசமும் ஒரே மாதிரி புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் டிரா செய்த அணி என்பதால், தென்னாப்பிரிக்கா 4ஆவது இடத்திற்கும், வங்கதேச அணி, மூன்றாவது இடத்திற்கும் முன்னேறி அசத்தும்.
மேலும், 81.82 புள்ளிகளுடன் இருக்கும் ஆஸ்திரேலிய அணி, 77.78 சதவீத புள்ளிகளுடன் முதல் இடத்தில் தொடரும். நியூசிலாந்து அணி, 72.22 சதவீத புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறது. இந்திய அணி, 51.52 சதவீத புள்ளிகளை பெற்று, 5ஆவது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலிய அணி, அதிக புள்ளிகளை பெற்று, அசைக்க முடியாத முதல் இடத்தில் இருக்கிறது. இதனால், ஆஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027 பைனலுக்கு முன்னேற வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எஞ்சிய ஒரு இடத்திற்குதான் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து இடையில் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் வாய்ப்பு: ஒருவேளை, இந்திய அணி, அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் தோற்றாலும், அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டெஸ்ட்களிலும் வென்றாக வேண்டும் என்ற இக்கட்டான நிலை உருவாகும். இதனால், நியூசிலாந்து டெஸ்ட் தொடர், இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
