SA vs NAM 2nd ODI – காட்டடி அடித்த தென்னாப்பிரிக்க அணி: அறிமுக ஓபனர் அதிரடி சதம், ஸ்கோர் விபரம் – south africa team scored 335 runs in 2nd odi vs namibia team

நமீபியா சென்றுள்ள தென்னாப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 348 ரன்களை குவித்த நிலையில், இறுதியில் மழை குறுக்கீடு காரணமாக, டிஎல்எஸ் விதிமுறைப்படி 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்றார்கள்.

இதனைத் தொடர்ந்து, 2ஆவது ஒருநாள் போட்டி துவங்கியது. இதில், டாஸ் வென்ற நமீபியா அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், ஓபனர் ஜோர்டன் ஹெர்மென் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முதல் போட்டியில், 150 ரன்களை அடித்த இவர், இரண்டாவது போட்டியில், 24 பந்துகளில் 20 ரன்களை மட்டும் சேர்த்து அவுட் ஆனார்.

இத்தொடரில், அறிமுக வீரராக இருக்கும் மற்றொரு ஓபனர் கன்னோர் எஸ்டர்குய்ஜன், தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி, ரன்களை குவித்தார். இவருடன், டோனி டி ஜோர்சியும் அதிரடி காட்டி, பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இருவரும் சேர்ந்து, மொத்தம் 168 பந்துகளில் 183 ரன்களை குவித்தார்கள். முதல் விக்கெட் 7.1ஆவது பந்தில் விழுந்த நிலையில், அடுத்து 2ஆவது விக்கெட் 35.1 ஓவரில்தான் விழுந்தது.

கன்னோர் 110 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர் உட்பட 119 ரன்களை குவித்து அசத்தினார். டோனி டி ஜோர்ஷி, 87 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 79 ரன்களை எடுத்தார்.

முதல் ஒருநாள் போட்டியில், அறிமுக ஓபனர் ஜோர்டன் ஹெர்மென் சதம் அடித்த நிலையில், 2ஆவது போட்டியில், இத்தொடரின் அறிமுக ஓபனர் கன்னோரும் சதம் அடித்துள்ளார். இப்படி, இளம் ஓபனர்கள் அடுத்தடுத்து சதம் அடிப்பது தென்னாப்பிரிக்க அணிக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

நமீபியா அதிரடி கம்பேக்: தென்னாப்பிரிக்க அணி 35 ஓவர்களிலேயே 210 ரன்களை அடித்துவிட்டதால், இரண்டாவது போட்டியிலும் பெரிய ஸ்கோரை அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மேத்யூ பிரிட்ஸ்கி 4 (5), ஜேசன் ஸ்மித் 18 (21), டிவோல்ட் பிரேவிஸ் 37 (30) போன்றவர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர். கடைசி நேரத்தில் ஏதன் போஷ் 13 பந்துகளில் 4 சிக்ஸர்கள் உட்பட 29 ரன்களை குவித்தார். இதனால், தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 335/9 ரன்களை குவித்து அசத்தியது.

நமீபியா அணி பௌலர் ஜாக் பிராஷெல் 10 ஓவர்களில் 64 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். ரூபின் ட்ரம்பிள்மேன் 10 ஓவர்களில் 57 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார். ஜான் பால்ட் 10 ஓவர்களில் 70 ரன்களை கசியவிட்டு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில், தென்னாப்பிரிக்க அணி, 102 புந்திகளுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி 109 புள்ளிகளுடனும் 2ஆவது இடத்திலும், இந்திய அணி, 116 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. தற்போது, நமீபியா அணிக்கு எதிரான கடைசி 2 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா வென்றால், இரண்டாவது இடத்திற்கு முன்னேறிவிடும். நமீபியா அணி, ஐசிசி தரவரிசையில் 16ஆவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link