SA vs ZIM Final – டிவோல்ட் பிரேவிஸ் அடித்த ரன் எத்தனை? 20 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 205 ரன் சேர்ப்பு – south africa team scored 205 runs vs zimbabwe team in tri series final

தென்னாப்பிரிகாக, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் நமீபியாவுக்கு சென்று முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் தகுதிபெற்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ்: முதலில் களமறிங்கிய தென்னாப்பிரிக்க அணியில், ஓபனர்கள் அதிரடி துவக்கத்தை கொடுத்தனர். ஓபனர் கன்னோர் 23 பந்தில் 32 ரன்களை சேர்த்த நிலையில், மற்றொரு ஓபனர் ஜோர்டன் ஹெர்மன் 29 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 53 ரன்னை சேர்த்தார்.

இப்படி, ஓபனர்கள் இருவரும் சிறந்த துவக்கத்தை கொடுத்த நிலையில், ஒன்டவுன் பேட்டர் டிவோல்ட் பிரேவிஸ் 23 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 32 ரன்னை சேர்த்து அவுட் ஆனார். அடுத்து, டோனி டி ஜோர்ஷி 17 (11), ரூபின் ஹெர்மன் 27 (16) ஆகியோருக்கு சிறந்த துவக்கம் கிடைத்தும் அதனை பெரிய ரன்களாக மாற்றவில்லை. இறுதிக் கட்டத்தில், ஏதன் போச் 7 (4), டுவன் யான்சன் 23 (14) ஆகியோர் கடைசி வரை களத்தில் இருந்தார்கள். இறுதியில், தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 205/5 ரன்களை சேர்த்தது.

ஜிம்பாப்வே அணியில், சிக்கந்தர் ராசா சிறப்பாக பந்துவீசி, 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். முசரம்பானியும் 4 ஓவர்களில் 25 ரன்களைதான் விட்டுக்கொடுத்தார். நியூமென் 4 ஓவர்களில் 2 விக்கெட்களை எடுத்தாலும், 51 ரன்களை வாரி வழங்கினார். பிராட் எவன்ஸ் 4 ஓவர்களில் 36 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை சாய்த்தார்.

கெத்து காட்டிய நமீபியா அணி: இறுதிப் போட்டிக்கு நமீபியா அணி தகுதிபெறவில்லை என்றாலும், இத்தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அசத்தியது. இரண்டு முறை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடி, இரண்டு முறையும் தென்னாப்பிரிக்காவுக்கு, பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்கள்.

முதல் லீக் போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் களமிறங்கி 20 ஓவர்களில் 163/9 ரன்களை அடித்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 145/9 ரன்களை மட்டும் சேர்த்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதனால், நமீபியா அணி மீது, இத்தொடரில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதன்பிறகு, ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை.

இருப்பினும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 196 ரன்கள் இலக்கை துரத்தி, இறுதியில் 190 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி, வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோற்றார்கள். அடுத்து, மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 156 ரன்களை மட்டும் அடித்துவிட்டு, கடைசிவரை போராடி, ஜிம்பாப்வே அணியை 18.1 ஓவரில்தான் வெற்றிபெற வைத்தனர்.

சமீபத்தில், கடைசி லீக் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 228/4 ரன்களை குவித்த நிலையில், நமீபியா அணியும் கடுமையாக போராடி, 20 ஓவர்களில் 217/3 ரன்களை எடுத்து, இறுதியில் 11 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வியை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link