பாகிஸ்தானில், தற்போது முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ராவல்பிண்டியில் துவங்கிய இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இங்கிலாந்து இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஓபனர்கள் அதிரடி துவக்கத்தை கொடுக்கவில்லை. டாம் பன்டன் 51 பந்தில் 50 ரன்களை அடித்த நிலையில், பென் டக்கெட் 39 பந்தில் 29 ரன்களைதான் சேர்த்தார்.
இப்படி, இருவரும் சொதப்பியப் பிறகு, ஜோ ரூட், 66 பந்தில் 69 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இப்படி, முதல் மூன்று பேட்டர்கள் அதிரடியாக விளையாடாத நிலையில், அடுத்து, கேப்டன் ஹேரி ப்ரூக் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் தொடர்ச்சியாக காட்டடி அடித்தனர்.
இதில், ஹேரி ப்ரூக் 116 பந்தில் 21 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் உட்பட 202 ரன்களை குவித்த நிலையில், வில் ஜாக்ஸ் 30 பந்தில் 66 ரன்களை குவித்து ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார்கள். இந்த இருவரும் சேர்ந்து, 77 பந்துகளிலேயே 185 ரன்களை குவித்து அசத்தினார்கள். ஒருநாள் பார்மெட்டில், அதிவிரைவாக 200+ ரன்களை அடித்தோர் பட்டியலில், ப்ரூக் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் 114 பந்தில் இரட்டை சதம் அடித்த நிலையில், ஷுப்மன் கில் 117 பந்தில் இரட்டை சதம் அடித்து 2ஆவது இடத்தில் இருக்கிறார்.
இலங்கை அணியும் அபாரம்: இதனைத் தொடர்ந்து, இலக்கை துரத்திக் களமிறங்கிய இலங்கை அணியில், கமிந்து மெண்டிஸ் 18 (16) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் அவுட் ஆன நிலையில், ஒன்டவுன் இடத்தில் ஆடிய கேப்டன் குஷல் மெண்டிஸ் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் ரன்அவுட் ஆகி சொதப்பினார்.
இப்படி, இரண்டு விக்கெட்கள் அடுத்தடுத்து விழுந்ததால், இலங்கை அணி, 430 ரன்களை சேஸ் செய்யாது எனக் கருதப்பட்டது. இந்நிலையில், ஓபனர் அவிக்ஷா பெர்ணான்டோ 83 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 97 ரன்களையும், பவன் ரத்னயாகே 106 பந்தில் 15 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 130 ரன்களையும் குவித்து அசத்தினார்கள்.
இப்படி, இருவரும் பெரிய ஸ்கோர் அடித்தப் பிறகு, தஷுன் ஷனகா, அதிரடியாக விளையாடி, 50 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 97 ரன்களை குவித்தார். மேலும், இறுதிக் கட்டத்தில், ஜனத் லியனாகே 27 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 61 ரன்களை குவித்தார்.
இப்படி, இரண்டு பேட்டர்களும் கடைசி நேரத்தில் காட்டடி அடித்ததால், இலங்கை அணி, 49.5 ஓவர்களில் 430/8 ரன்களை குவித்து, 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று, ஒருநாள் கிரிக்கெட்டில், இரண்டாவது மிகப்பெரிய சேஸிங்கை செய்து அசத்தினார்கள்.
இலங்கை அணி, சமீப காலமாகவே டம்மி அணி என பெயர் வாங்கி வந்த நிலையில், தற்போது 430 ரன்களை சேஸ் செய்து, ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளனர். 2006ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 435 ரன்களை சேஸ் செய்ததுதான் சாதனையாக இருந்த நிலையில், தற்போது இரண்டாவதாக இலங்கை அணி வரலாறு படைத்துள்ளது.
