போட்டி முடிவில் ஹர்மன்பிரீத் ஸ்மிருதி நோக்கி வரும் போது , ஸ்மிருதி அவரை கண்டுக் கொள்ளாமல் நகரும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ அந்த இரு வீராங்கனைகளுக்கும் இடையில் உள்ள மோதலை பகிரங்கப்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஸ்மிருதி தனக்கு முன்கூட்டியே கிடைக்க வேண்டிய கேப்டன் பதவிக்கு , ஹர்மன் முட்டுக்கட்டையாக இருப்பதாக கருதினார். இவர்களுக்குள் நடந்த மோதல் காரணமாகத்தான் ஹர்மன் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்று அப்போது கூறப்பட்டது.
ஹர்மன் நீண்ட காலம் அணியினை வெற்றிகரமாக வழி நடத்தி ஏராளமான தொடர்களை வென்று காட்டியுள்ளார். மிக முக்கியமாக மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியக் கேப்டன் என்ற பெருமைக்குரியவர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வலிமைமிக்க அணிகளில் ஒன்றாக மாற்றியதில் ஹர்மன் பங்கு மிக அதிகம். புதிய கேப்டன் ஸ்மிருதி ஜிம்பாவேவிற்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய மகளிர் அணி சமீபத்திய காலமாக தான் வெற்றிகரமாகவும், பொருளாதார ரீதியில் முன்னேறி அணியாகவும் மாறி வருகிறது. அதற்குள் இது போன்ற பூசல்கள் அணியினை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு சென்று விடுமோ? என்று ரசிகர்கள் கவலைப்படுகின்றனர்.
