மாறி மாறி விமர்சனங்களும் போய்க்கொண்டு இருக்கின்றன. இந்த சமயத்தில் தான் சுந்தர் சி தன் சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவில் அவர் பேசியது, உங்களுக்கு தியாகராஜன் யாருக்கு தெரியுமா ? அவர் குடும்ப பெயரை சேர்த்து பார்த்தால் தான் அவரை யாரென்றே மக்களுக்கு தெரியும். ஆனால் என்னை பேச்சுக்கு பேச்சு ஸீரோ என அவர் சொல்லிக்கொண்டு வருகின்றார்.
சுந்தர் சி vs பிடிஆர்
குடும்ப பெயரை எடுத்துவிட்டால் யாரென்றே தெரியாதவர் என்னை ஸீரோ என அழைக்கின்றார். ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்தவன் நான். என் பாட்டி இட்லி விற்று நான்கு பசங்களை வளர்த்தார். மிடில் க்ளாசில் பிறந்த நான் திரைத்துறையில் களமிறங்கி படாத பாடுபட்டு உழைத்து முன்னேறி இன்று உங்கள் முன் நிற்கின்றேன். சுந்தர் சி என்ற என் பெயரை சொன்னால் தமிழ்நாடு முழுவதும் தெரியும். என் தனிப்பட்ட உழைப்பில் எனக்கென ஒரு பெயரை உருவாக்கி இருக்கின்றேன்.
சுந்தர் சி பேச்சு
சுந்தர் சி என்ற பெயரையே ஒரு பிராண்டாக உருவாக்கியுள்ளேன். குடும்ப பெயரை வைத்துக்கொண்டு அமெரிக்காவில் படித்துக்கொண்டு குடும்ப பின்னணியின் மூலம் எம்.எல்.ஏ பதவியில் அமர்ந்தவர் நான் இல்லை. தனி மனிதராக போராடி தான் இந்த இடத்திற்கு வந்தேன். மக்களுக்கு அவருடைய பெயரே தெரியவில்லை. குடும்ப பெயரை வைத்து தான் அவரை தெரிகின்றது. ஆனால் அவர் என்னை கடுமையாக பேசி வருகின்றார்.
தோல்வி பயத்தால் என்னை விமர்சித்து பேசுகின்றார்.கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் இந்த தொகுதிக்கு வரவே இல்லை. தற்போது தேர்தலுக்காக தான் அவர் வெளியே வருகின்றார் என பழனிவேல் தியாகராஜனை கடுமையாக பேசி விமர்சனம் செய்திருக்கின்றார் சுந்தர் சி. இந்நிலையில் கடந்த இருமுறையும் மதுரை மத்திய தொகுதியில் பழனிவேல் தியாகராஜன் தான் வெற்றிபெற்று இருக்கின்றார். இம்முறையும் அவருக்கான வெற்றிவாய்ப்பு அதிகமாக இருப்பதாக கணிக்கப்படுகின்றது.
பலத்த போட்டி
ஆனாலும் அதிமுக கூட்டணி சார்பாக களமிறங்கும் சுந்தர் சி பழனிவேல் தியாகராஜனுக்கு கடும் சவாலாக இருப்பார் என்றும் சொல்லப்படுகின்றது. இருப்பினும் கடைசியாக மதுரை மத்திய தொகுதியில் 1977 ஆம் ஆண்டு தான் அதிமுக வெற்றிபெற்றது. அதன் பிறகு மதுரை மத்திய தொகுதியில் அதிமுக வெற்றிபெறவே இல்லை. எனவே இம்முறை அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் சுந்தர் சி வெற்றிபெறுவாரா ? என்பது தான் கேள்வியாக இருந்து வருகின்றது.
இதற்கிடையில் சுந்தர் சி தனது பரப்புரைகளில் மிகவும் நம்பிக்கையுடன் பேசி வருகின்றார். என்னதான் அவர் அரசியலில் புதிது என கூறினாலும் அவரின் கருத்துக்கள் மக்களால் கவனிக்கப்படுவதாக தெரிகின்றது. தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கவும் சுந்தர் சி தவறுவதில்லை.
https://x.com/SundarCOffl/status/2045440123513471080
அரசியல் ரீதியான விமர்சனங்களை தான் சுந்தர் சி முன் வைத்து பரப்புரை செய்கின்றார். எனவே இம்முறை மதுரை மத்திய தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்சமயம் சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுவதால் இத்தொகுதி கவனத்தை ஈர்த்து வருகின்றது.
