பாஜக பிடியில் அதிமுக சிக்கியுள்ளது; ராகுல் காந்தி சாடல்

துறையூர்,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே, திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று திருச்சி துறையூரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது,

இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான தேர்தல். என்ன விலை கொடுத்தாவது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஒரு பொம்மை முதல்-அமைச்சரை நியமிக்க பாஜக முயற்சிக்கிறது.

தமிழ்நாட்டு வரலாற்றில் அதிமுக சிறப்புமிக்க கட்சி. ஆனால், தற்போது பாஜகவின் முகமூடியாகவும் , பொம்மை கட்சியாகவும் அதிமுக இருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க பாஜகவிடம் சரணடைந்துவிட்டனர். பாஜக பிடியில் அதிமுக சிக்கியுள்ளது. பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதேபோல், தமிழகத்தில் அதிமுகவை ஆட்சியில் அமரவைத்து பொம்மை முதல்-அமைச்சரை தனது கட்டுப்பாட்டில் வைக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார். அதற்கு நாம் இடம்கொடுக்கக்கூடாது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கொள்கைகளை சமரசம் செய்யமாட்டார் என பாஜகவுக்கு தெரியும். அவரை பணியவைக்க முடியாது’ என்றார்.

Source link