டிடிஎஃப் வாசனுக்கு ஓட்டு: பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் ஒயில்டு கார்டு என்ட்ரியான டிடிஎஃப் வாசன் அந்த வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே அவருக்கு ரசிகர்கள், ரசிகைகள் கூட்டம் இருக்கிறது. குட்டீஸ் முதல் பாட்டீஸ் வரை வாசனுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது தங்களுக்கு பிடித்த டிடிஎஃப் வாசன் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் அவருக்கு ஆதரவாக தானே ஓட்டு போடுவார்கள்.
வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி வரும்போது அரங்கி்ல் இருக்கும் ஆட்கள் வாசன் பெயரை கேட்டால் கைதட்டி பாராட்டுகிறார்கள். இதை ஹவுஸ்மேட்ஸ் கவனித்துவிட்டார்கள். அதிலும் வாசனுக்கு கைதட்டல்கள் வந்தாலே லட்சுமி ப்ரியாவின் முகம் மாறுவதை யாரும் கவனிக்காமல் ஒன்றும் இல்லை.
பிக் பாஸ் ரெட் கார்டு: இந்நிலையில் டாஸ்க்கின்போது முகேஷுக்கும், வாசனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு கைகலப்பாகிவிட்டது. வாசனுக்கு சட்டு சட்டுனு கோபம் வரும். அது தான் அவரின் பெரிய வீக்னஸ் என்பதை ஹவுஸ்மேட்ஸ் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது முகேஷிடம் வாசன் நடந்து கொண்டதை பார்த்ததும் அவருக்கு ரெட் கார்டு கொடுக்குமாறு கோரிக்கை விடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பைக் பிரியரான டிடிஎஃப் வாசன் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டுவார் என்பது அவரின் ரசிகர்களுக்கு நன்கு தெரியும். அப்படி வண்டி ஓட்டி பல முறை விபத்துகளில் சிக்கியிருக்கிறார். அதன் விளைவாக அவருக்கு ஒரு காது அவ்வப்போது கேட்காது. இதை மனதில் வைத்து தான் போய் டாக்டரை பார்க்கவும் என முகேஷ் சொன்னதும் கடுப்பாகி அடிக்க பாய்ந்தார் வாசன். முகேஷ் ட்ரிக்கர் செய்ததால் வாசனுக்கு கோபம் வந்தது. இதில் தவறு என்ன இருக்கிறது என டிடிஎஃப் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
வாசனுக்கு காது கேட்பதில் பிரச்சனை இருப்பது முகேஷுக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறீர்களா?. வாசனின் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்திருப்பதாக ஜேசனிடம் முகேஷ் கூறியிருந்தார். அதனால் யூடியூப் சேனலில் தன் காது சிக்கல் குறித்த வாசனின் வீடியோவை பார்த்துவிட்டு தான் முகேஷ் இப்படி பேசி அவரை கடுப்பேற்றியிருக்கிறார் என்கிறார்கள் டிடிஎஃப் வாசன் ரசிகர்கள்.
அப்போ பிரதீப்: அது மட்டும் அல்ல வாசன் ஆதரவாளர்கள் எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராமில் வேறு ஒரு விஷயத்தையும் கூறியிருக்கிறார்கள். அதாவது பிரதீப் ஆண்டனிக்கு பார்வையாளர்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்தார்கள். அதை பார்த்த வயித்தெரிச்சலில் தான் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் பொய் பழி சுமத்தி அவருக்கு ரெட் கார்டு கொடுத்தார்கள். தற்போது லட்சுமி ப்ரியா உள்ளிட்ட ஆட்களும் அதே போன்று தான் கூட்டு சதி செய்து வாசனுக்கு எப்படியாவது ரெட் கார்டு கொடுக்க வைக்க வேண்டும் என இருக்கிறார்கள். இது நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என டிடிஎஃப் வாசனின் ஆதரவாளர்கள் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
வாசனை ட்ரிக்கர் செய்தால் உடனே பாய்ந்து தாக்குகிறார் என்பதை ஹவுஸ்மேட்ஸ் புரிந்து வைத்துக் கொண்டு ஓவராக செய்கிறார்கள். வாசனுக்கு அல்ல அவரை ட்ரிக்கர் செய்த முகேஷுக்கு தான் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என அவரின் ஆதரவாளர்கள் பிக் பாஸிடம் கூறியிருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
வாசன் நடந்து கொண்ட விதத்திற்காக இந்த சனிக்கிழமை அவரை விஜய் சேதுபதி நிச்சயம் கண்டிப்பார். ஆனால் ரெட் கார்டு கொடுக்க வாய்ப்பில்லை. மக்களின் அமோக ஆதரவு பெற்றிருக்கும் ஒரு போட்டியாளரை அவ்வளவு சீக்கிரத்தில் வெளியேற்ற மாட்டார்கள்.
Source link
