Union Bank 444 Days FD,யூனியன் வங்கியின் ஃபிக்சட் டெபாசிட் திட்டம்: 444 நாள் முதலீட்டில் இவ்வளவு லாபமா! – union bank 444-day fd offers huge returns for senior citizens

யூனியன் வங்கியின் இந்த 444 நாள் டெபாசிட் திட்டத்தில் அதிக வருவாயைப் பெறலாம். அதுவும் மூத்த குடிமக்கள் 7.25 % வரை வட்டி பெறலாம். அதுகுறித்த முழுமையான விவரங்களை இங்கே நீங்கள் பார்க்கலாம்.

தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியை பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானம் ஈட்டித் தரும் இடத்தில் போட்டு வைக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். அதற்கு ஃபிக்சட் டெபாசிட் திட்டம் (FD) எப்போதும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு கால அளவுகளைக் கொண்ட நிலையான வைப்புத் திட்டங்களில் சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. தற்போது இவ்வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவுகளுக்கு நல்ல வட்டி வருமானத்தை வழங்குகிறது. இதில் ஆண்டு வட்டி விகிதங்கள் 2.70 சதவீதம் முதல் 7.30 சதவீதம் வரை உள்ளன. எனவே, குறுகிய காலத்தில் சிறந்த வருமானத்தை எதிர்க்கும் மக்களுக்கு இவ்வங்கியின் சிறப்பு 444 நாள் ஃபிக்சட் டெபாசிட் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

யாருக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ரூ. 3 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கு (மொத்த வைப்புத்தொகைகள் தவிர்த்து) 444 நாள் நிலையான வைப்புத் திட்டங்களுக்கு 6.50 % முதல் 7.25 % வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. இதில், சாதாரண குடிமக்களுக்கு( 59 வயது வரை) 444 நாள் நிலையான வைப்புத் திட்டத்தின் மீது ஆண்டுக்கு 6.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதேநேரம், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கு இந்தக் காலத்திற்கு 7.00 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மிக மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்குக் கிடைக்கும் சிறப்புச் சலுகைகள்!

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது சீனியர் சிட்டிசன் வாடிக்கையாளர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கூடுதல் வட்டிச் சலுகைகளை வழங்குகிறது. வழக்கமாக, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்குச் சாதாரண வாடிக்கையாளர்களை விட 0.50 % (50 அடிப்படை புள்ளிகள்) கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. அதே வேளையில், 80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்குச் சாதாரண வாடிக்கையாளர்களை விட 0.75 % கூடுதல் வட்டியும், சாதாரண மூத்த குடிமக்களை விட 0.25 % கூடுதல் வட்டியும் வழங்கப்படுகிறது.

வட்டி விகிதம் எப்போது மாற்றப்பட்டது?

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தனது நிலையான வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதங்களை கடைசியாக 2026 ஆகஸ்ட் 4ஆம் தேதி மாற்றியமைத்தது. நாட்டின் எந்தவொரு வங்கியிலும் நிலையான வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகித மாற்றங்கள், முக்கியமாக இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் சந்தை நிலவரங்களைப் பொறுத்தே அமைகின்றன. எனவே, சந்தை அபாயங்கள் ஏதும் இல்லாமல் தங்கள் வைப்புத்தொகையை வளர்க்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இந்த 444 நாள் நிலையான வைப்புத் திட்டம் ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தேர்வாக அமையும்.

Source link