Venus Retrograde Effects,சுக்கிரன் வக்கிரப் பெயர்ச்சி: அடுத்த 22 நாட்களில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் – venus retrograde 2026: zodiac signs that need to be cautious over the next 22 days

சுக்கிரனின் பெயர்ச்சி மற்றும் கிரக அமைப்பு ஆனது எந்த அளவிற்கு அற்புதமான பலன்களை தருமோ, அதே அளவிற்கு, அதனுடைய வக்ர நகர்வானது சில சிக்கல்களை, தடைகளை தரக்கூடியதாக அமையும். இந்த விதத்தில் அடுத்த 22 நாட்களில் எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

துலாம் ராசி ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்து வரக்கூடிய சுக்ர பகவான், அக்டோபர் மூன்றாம் தேதி முதல் பின்னோக்கி நகரக்கூடிய வக்கிர நிலையை அடைந்தார். இந்த நிலையானது நவம்பர் 14ஆம் தேதி வரை இந்த நிலையில் சஞ்சாரம் செய்து வருவார். சுக்கிரனுடைய இந்த பின்னோக்கிய நகர்வு சில ராசிகளுக்கு சாதகமாக இருந்தாலும், சிலருக்கு சிக்கலை அதிகரிக்க கூடியதாக அமையும். அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம். எந்தெந்த ராசிகள் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

ரிஷப ராசி

ரிஷப ராசி அதிபதியான சுக்கிர பகவான் தற்பொழுது வக்ர கதியில் பயணித்து வருவதால் அடுத்த 22 நாட்களுக்கு உங்களுடைய வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இதனால் சரியான ஓய்வு கிடைக்காத நிலை அல்லது சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த காலத்தில் உங்களுடைய உணவு பழக்க வழக்கங்களை சீரமைத்துக் கொள்வதோடு, சரியான நேரத்தில் உணவு அருந்த முயற்சி செய்யவும். மேலும் உடல் ஆரோக்கியத்தையும் கவனமும் செலுத்தவும்.

வேலை தொடர்பான தொந்தரவுகள் அல்லது ஆரோக்கிய பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் ஏற்படலாம். இந்த காலத்தில் அதிகப்படியான சிந்தனை தவிர்த்து, நிதானமான அணுகுமுறை நன்மை தரும்.

கன்னி ராசிக்கான சுக்கிரனின் வக்ர கதி ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு சுக்கிரனின் வக்ர கதியின் தாக்கம் சிக்கல்களை தரக்கூடியதாக அமையலாம். தங்களுடைய செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான திட்டமிடலுடன் செயல்படவும். உங்களுடைய வேலை அல்லது தொழில் தொடர்பாக எதிர்பார்த்த பலனை அடைய கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும்.

​பண பரிவர்த்தனை விஷயங்களை மேற்கொள்ளும் போது கூடுதல் கவனம் தேவை. முகம் தெரியாத நபர்களுக்கு பணம் அனுப்புவதை தவிர்க்கவும். உங்களுடைய குடும்ப உறவுகளை பராமரிப்பது, வேலைகளை திட்டமிடுவது போன்ற விஷயங்களில் அவசரத்தை தவிர்த்து பொறுமையை கையாள்வது சிறப்பான நன்மைகளை தரும்.

துலாம் ராசியில் சுக்கிரனின் வக்ர கதி ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

பொதுவாக ஒரு ராசி அதிபதி தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரும் போது, அற்புதமான பலன்களை தரக்கூடியதாக இருக்கும். ஆனால் தற்பொழுது துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன் வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகும். இந்த காலத்தில் சுக்கிரன் சாதம் மற்ற பலனை தரக் கூடியதாக அமையும். உங்களுடைய பணிகளை, பொறுப்புக்களை பொறுமையுடன் செய்து முடிக்கவும். சிலருக்கு அதிக பொறுப்புகள், வேலைப்பளு, தொழில் தொடர்பான அலைச்சல் சந்திக்க நேரிடும். ​

பொறுமையை கடைப்பிடிப்பதும், போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்வது நம்மை தரும். இந்த காலத்தில் வெளியில் உணவு அருந்துவதை தவிர்க்கவும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம், சேமிப்பு மேம்படும்.

மகர ராசியினருக்குச் சுக்கிரனின் வக்ர கதி என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

சுக்கிரனின் பின்னோக்கிய நகர்வு மகர ராசியினர், கவனம் செலுத்த வேண்டிய காலமாக இருக்கும். உங்களுடைய மனக்குழப்பம் அதிகரிக்கும். அதனால் வேலைகளை செய்வதிலும், பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதிலும் கவனம் தேவை. சிலருக்கு பணி சுமை காரணமாக சோர்வாகவும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாத சூழலும் ஏற்படலாம். கோபத்தில் பேசுவதை தவிர்த்து நிதானத்தை கடைபிடிக்கவும். மேலும் உங்களுடைய நிதிநிலையை பராமரிப்பதும், வரவு செலவுகளை திட்டமிடுவது உங்கள் நிதி நிலையை சமநிலைப்படுத்த உதவும்.

கும்ப ராசியினருக்குச் சுக்கிரனின் வக்ர கதி என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

கும்ப ராசி அன்பர்களுக்கு சுக்கிரனின் இந்த வக்ர கதி, எச்சரிக்கையுடன் செயல்படக்கூடியதாக அமையும். உங்கள் முன்னெடுக்கக்கூடிய காரியங்களில் திட்டமிடுவதும், தொடர் முயற்சிகளும் தேவைப்படும்.
இந்த காலத்தில் பெரிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பதும், வேண்டுமெனில் அனுபவம் வாய்ந்த நபர்களின் ஆலோசனை பெற்று செயல்படுவது நன்மை தரும். உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதற்கான ஆலோசனை தேவை. குடும்ப பொறுப்புக்களை செய்து முடிப்பதிலும், குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றவும் சற்று சவால்களை சந்திக்க நேரிடலாம்.

Source link