சுக்கிர பகவான் இன்று, செப்டம்பர் 2ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இவர் அடுத்த 64 நாட்கள் இந்த ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். மேலும் இங்கு வக்ர நிலையிலும் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் காரணமாக சில ராசி சேர்ந்த நண்பர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள் தேடி வரும். 12 ராசிகளில் யாருக்கு சுபயோக பலன்கள் கிடைக்கும் உள்ளன என்பதை இங்கு தெரிவிக்கவும்.
ஜோதிடத்தில் சுக்கிர பகவானை அழகு, வசீகரம், ஆடம்பரம், உலக இன்பங்கள் தரக்கூடிய ஒரு மங்கள கிரகமாக கருதப்படுகிறது. இவர் தற்பொழுது, அவருடைய சொந்த ராசியான துலாம் ராசியில் பெயர்ச்சியாகி உள்ளார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி காரணமாக நீண்ட காலமாக இருந்த உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். சுக்கிரன் ஆட்சி செய்யக்கூடிய அடுத்த இரண்டு மாதங்கள் சில ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், வெற்றி உள்ளிட்ட அதிர்ஷ்டம் தேடி வரக்கூடியதாக இருக்கும். சுக்கிரன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்? அதைப் பார்ப்போம்.
ரிஷப ராசி
ரிஷப ராசி நண்பர்களுக்கு இது ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. இதன் மூலம் குறிப்பிடத்தக்க நன்மைகளை பெற உள்ளீர்கள். வியாபாரம் அல்லது தொழில் செய்யக்கூடிய அன்பர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். உங்களுடைய தொழில் தொடர்பாக நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் செய்த முதலீடுகளில் இருந்து நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் குழந்தைகள் மூலமாக நீங்கள் பயனடைவீர்கள். அவர்களிடம் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.
வாழ்க்கையில் சில முக்கியமான மற்றும் மகிழ்ச்சி தரக்கூடிய மாற்றங்களை காண்பீர்கள். மேலும் பணி இடத்தில் கடினமான உழைப்பிற்கான பாராட்டுகளையும், அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி காரணமாக ஒட்டுமொத்தமாக அதிர்ஷ்டம் நிறைந்ததாகவே இருக்கும்.
மிதுன ராசி
மிதுன ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுடைய தொழில் மட்டும் மனிதன் தொடர்பாக நல்ல வாய்ப்புகளையும், தொடர்புகளையும் பெறுவீர்கள். நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்க்க வாய்ப்பு கிடைக்கும், உங்களுடைய ஆசை நிறைவேறுவதை காண்பீர்கள். இந்த காலத்தில் உங்களுடைய திறமையை நிரூபிக்கவும், படைப்பாற்றலை வெளிப்படுத்தும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் கூட்டாளிகள் உறுதுணையாக இருப்பார்கள். மேலும் உங்களுடைய குடும்பத்தில் வாழ்க்கை துணையின் ஆதரவு மன தைரியத்தை தரக்கூடியதாக இருக்கும். இந்த காலத்தில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்வது நன்மை தரும்.
கன்னி ராசி
கன்னி ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு தன ஸ்தானத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் நிதி நிலையை உயர்த்தக் கூடியதாக இருக்கும். உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகளை முடிக்கவும், உங்களுக்கு வர வேண்டிய பணம் கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. நிதி விவகாரங்கள் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். கடின உழைப்பிற்கான வெகுமதி பெறுவீர்கள்.
உங்களுடைய வேலை தொடர்பாக புதிய பொறுப்புகள் உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும். தொழில் செய்யக் கூடியவர்கள் புதிய வாய்ப்புகள் தேடி வரும். நீங்கள் எந்த ஒரு முதலீடு அல்லது முடிவுகள் எடுக்கும் போது துறை வல்லுனர்களின் ஆலோசனையின் பெயரில் செயல்பட்டால் உங்களுக்கான லாபம் அதிகரிக்கும். உங்களுக்கு நிதிநிலை தொடர்பான ஸ்திரத்தன்மை அதிகரிக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்கு நன்மை அதிகம் கிடைக்கும். உங்களுடைய லாப ஸ்தானத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் காரணமாக, நிதிநிலை தொடர்பான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக வேலை தேடக்கூடிய இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் செய்யக்கூடியவர்கள் லாபகரமான ஒப்பந்தங்கள் பெறுவார். உங்களுடைய குடும்ப உறவுகள் முன்பை விட வலுவாக இருக்கும். தொழிலில் ஈடுபட்டுள்ள அன்பர்கள் வருமான உயர்வை பெறுவார்கள். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்ய ஆக நினைத்தால் இது சாதகமான காலமாக அமையும். உங்களுடைய நிதி நிலையக்கூடிய காலமாக இருக்கும்.
மகர ராசி
மகர ராசி அன்பர்களுக்கு கர்ம ஸ்தானத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகளை முடிக்கவும், அதன் மூலம் லாபத்தை அடையவும் வாய்ப்பு உண்டு. மேலும் எதிர்காலத்தில் நல்ல பலனை தரக்கூடிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். கலை துறையில் இருப்பவர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்கவும், புரிய வாய்ப்புகளை பெறவும் முடியும். பணியிடத்தில் உங்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகளும், லாபமும் கிடைக்கும்.
கும்ப ராசி
கும்ப ராசி அன்பர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிர பகவானின் பெயர்ச்சி காரணமாக, உங்களுடைய தொழில் தொடர்பான வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். வேலை தொடர்பாக நல்ல மாற்றங்களும், சில புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களுடைய திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் செய்யக் கூடியவர்கள் புதிய திட்டங்களை செயல்படுத்தினால் அபரிமிதமான நன்மைகளை பெறலாம்.
வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளை பெறுவார்கள். நிதிநிலை சார்ந்த விவகாரங்களில் வளர்ச்சியையும், புதிய வருமான ஆதாயங்களையும் பெறுவீர்கள். இந்த காலத்தில் நீங்கள் இருக்கக்கூடிய ஒவ்வொரு முடிவும் சாதகமான பலன்களையே தரும்.
குறிப்பு:
இங்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஜோதிடத் தகவல்களும் தீர்வுகளும் ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றிற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இத்தகவல்களைக் கருத்தில் கொள்வதற்கும் முழுமையான விவரங்களைப் பெறுவதற்கும், தொடர்புடைய நிபுணரை அணுகுவது சிறந்தது.
