விநாயகப் பெருமான், எளிமையான கடவுள். அவரின் அருளை பெறுவதற்கு தூய்மையான அன்பும், பக்தியும் மட்டுமே முக்கியம். அந்த அன்புடன் விநாயகருக்கு எதை படைத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு, நமக்கு அன்பையும், அருளையும் வாரி வழங்கக் கூடிய கருணையே வடிவமான தெய்வம் தான் விநாயகப் பெருமான். விநாயகருக்கு எது வேண்டுமானாலும் படைக்கலாம் என்றாலும் நாம் படைக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி வழிபாடு :
விநாயகர் சதுர்த்தி அன்று களி மண்ணால் செய்த விநாயகர் சிலையை வீட்டில் வைத்து, நீராடி சுத்தமாகி, மலர்களால் அலங்கரிக்க வேண்டும். கொழுக்கட்டை, சுண்டல், கரும்பு, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, புட்டு, வெள்ளிரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை, கம்பு போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம். விநாயகருக்கு உகந்த மலர்கள் மற்றும் இலைகளால் அர்ச்சனை செய்து, விநாயகர் அகவல் அல்லது விநாயகர் ஸ்தோத்திரங்களைச் சொல்லி, தீப தூப ஆராதனை செய்து வழிபட வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு 21 வகையான மலர்கள், 21 வகையான இலைகள், 21 வகையான பழங்கள் ஆகியவை படைத்து வழிபட வேண்டும் என பாரம்பரிய மரபுகள் சொல்கின்றன. அந்த 21 வகையான மலர்கள், இலைகள், பழங்கள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
விநாயகருக்கு உகந்த 21 வகை மலர்கள் :
1. செம்பருத்தி
2. எருக்கம்பூ
3.அரளிப்பூ
4. மல்லிகை
5. முல்லை
6. சாமந்தி
7. தாமரை
8. சங்கு புஷ்பம்
9. பவளமல்லி
10. நந்தியாவட்டை
11. தாழம்பூ
12. மகிழம்பூ
13. செண்பகப்பூ
14. ரோஜா
15. செவ்வந்தி
16. மனோரஞ்சிதம்
17. காக்கட்டான்பூ
18. கனகாம்பரம்
19. கொன்றைப்பூ
20. தும்பைப்பூ
21. நீலோத்பலம்
விநாயகருக்கு உகந்த 21 வகை இலைகள் :
1. முல்லை இலை
2. கரிசலாங்கண்ணி இலை
3. வில்வ இலை
4. அருகம்புல்
5. இலந்தை இலை
6. ஊமத்தை இலை
7. வன்னி இலை
8. நாயுருவி இலை
9. கண்டங்கத்திரி இலை
10. அரளி இலை
11. எருக்கம் இலை
12. மருத இலை
13. விஷ்ணுகிராந்தி இலை
14. மாதுளை இலை
15. தேவதாரு இலை
16. மருக்கொழுந்து இலை
17. அரசு இலை
18. ஆல இலை
19. நொச்சி இலை
20. ஜாதிமல்லி இலை
21. தாழம்பூ இலை
விநாயகருக்கு உகந்த 21 வகை பழங்கள் :
1. விளாம்பழம்
2. வாழைப்பழம்
3. மாம்பழம்
4. பலாப்பழம்
5. மாதுளம்பழம்
6. ஆப்பிள்
7. கொய்யாப்பழம்
8. சாத்துக்குடி
9. ஆரஞ்சுப்பழம்
10. திராட்சை (கருப்பு/ பச்சை)
11. பேரிக்காய்
12. பப்பாளிப்பழம்
13. நாவல்பழம்
14. சீதாப்பழம்
15. எலுமிச்சம்பழம்
16. பெரிய நெல்லிக்காய்
17. விலாமிச்சம் பழம்
18. கிர்ணிப்பழம்
19. பேரீச்சம்பழம்
20. அத்திப்பழம்
21. இலந்தைப்பழம்
