WI vs PAK 1st Test – மெகா வெற்றியைப் பெற்ற மே.இ.தீவுகள்: WTC புள்ளிப் பட்டியலில் அதிரடி முன்னேற்றம் – west indies team beat pakistan team by 90 runs in 1st test and new wtc points table

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 311/10 ரன்களை குவித்த நிலையில், அடுத்து பாகிஸ்தான் அணி, 282/10 ரன்களை மட்டும் அடித்து, 29 ரன்கள் பின்தங்கியது.

பிறகு, இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 181/10 ரன்களை அடித்து, பாகிஸ்தான் அணிக்கு, 211 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்த நிலையில், பாகிஸ்தான் அணி, 120/10 ரன்களை மட்டும் சேர்த்து, 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

பிட்ச், கடைசி நேரத்தில், வேகத்திற்கு சாதகமாக மாறியதால்தான், பாகிஸ்தான் அணியால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. பாகிஸ்தான் அணியின் 20 விக்கெட்களையும், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் எடுத்தனர்.

WTC புள்ளிப் பட்டியல்: இப்போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றியைப் பெற்றதால், WTC புள்ளிப் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, அதிரடி முன்னேற்றத்தை கண்டது. அதே 8ஆவது இடத்தில் நீடித்தாலும், முதல் முறையாக 20+ சதவீத புள்ளிகளை பெற்றுள்ளனர். அதாவது, 22.73 சதவீத புள்ளிகளுடன் இருக்கிறார்கள். இங்கிலாந்து அணி, 24.36 சதவீத புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் இருக்கிறது.

ஒருவேளை, மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்த டெஸ்ட் போட்டியிலும் வென்றால், இங்கிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி, 7ஆவது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் அணி, 6.67 சதவீதம் என்ற மோசமான புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் இருக்கிறது.

பாகிஸ்தான் அணி மோசம்: பாகிஸ்தான் டெஸ்ட் அணி, 2023ஆம் ஆண்டு ஜூலையில் இருந்து 8 வெளிநாட்டு டெஸ்ட்களில் விளையாடி, 8 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளனர். இது, பாகிஸ்தான் டெஸ்ட் அணியின், மிகமோசமான வரலாறாக மாறியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி, கடந்த 11 டெஸ்ட் போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளனர். கடைசியாக, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியபோது ஒரு வெற்றியைப் பெற்றனர். அதற்குமுன், 9 டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு வெற்றியைக் கூட பெற முடியாத நிலைமை இருந்தது.

மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் இடையிலான இந்த டெஸ்ட் போட்டியில், முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்கள்தான் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அதாவது, இந்த டெஸ்ட் போட்டியின் 40 விக்கெட்களையும் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே எடுத்தனர். அந்த அளவுக்கு, பிட்ச், முழுக்கு முழுக்க வேகத்திற்கு சாதகமாக இருந்தது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, பாகிஸ்தான் டெஸ்ட் அணி, 2017ஆம் ஆண்டிற்கு பிறகு குறைந்த ஸ்கோரை அடித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் 81 ரன்களுக்கு சுருண்ட நிலையில், தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் 120 ரன்களை மட்டும் எடுத்து சொதப்பியுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி, வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி துவங்க உள்ளது. இப்போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027 பைனல் குறித்து பாகிஸ்தான் யோசிக்கவே தேவையில்லை. முன்கூட்டியே வெளியேறிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

Source link