ஜோதிடத்தின் படி சில ராசிகளின் இயல்பு, சிந்தனை, செயல்பாடு மற்றும் உறவுகளை கையாளும் விதம் உள்ளிட்டவை அவர்களுடைய திருமண வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும், சிக்கல்களையும் எதிர்கொள்ள வைக்கிறது. இதனுடைய தாக்கம் அவர்களுடைய திருமண வாழ்க்கையில் மெல்ல பற்றுதல் குறைய தொடங்கவும், கருத்து வேறுபாடு அதிகரிக்கவும், இறுதியில் விவாகரத்து வரை கொண்டு செல்லக்கூடிய சூழலை உருவாக்குகிறது. அப்படி திருமண வாழ்க்கையில் இணக்கத்தன்மை குறைவாக இருக்கக் கூடிய ராசிகள் இங்கு தெரிந்து கொள்வோம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசி மற்றும் அந்த ராசி அதிபதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க குண நலன்கள் இருக்கும். மேலும் அந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு துணையாக வரக்கூடிய நபரின் ஜாதகத்துடன் சரியான இணக்கத்தன்மை இல்லாவிட்டால், அவர்களுடைய திருமண வாழ்க்கையில் அதிக சவால்களையும், கருத்து வேறுபாடுகள் எதிர்கொள்ள வாய்ப்புகள் உண்டு. திருமணத்தின் வெற்றி அல்லது தோல்வியானது ராசியை மட்டும் வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. அந்த இரு நபர்களுடைய பரஸ்பரம் இணக்கத்தன்மை, தகவல் தொடர்பு, ஜாதக பொருத்தம் மற்றும் நம்பிக்கை, கொடுத்து சொல்லுவது போன்ற விஷயங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன . சில ராசிகள் ஜோதிடத்தின் படி விவாகரத்துக்கு செல்ல கூடிய வாய்ப்புள்ள ராசிகளை இங்கு பார்ப்போம்.
திருமண வாழ்க்கையின் இணக்கத் தன்மை
ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய தனி குண நலன்கள், பலம், பலவீனங்கள் மற்றும் ஆதமை பண்புகள் கொண்டிருக்கும். இரண்டு மனங்கள், ராசிகள் சேரும்போது அவர்களிடையே இருக்கு கூடிய சிந்தனை முறை, உறவுகளை கையாளும் விதம் மற்றும் விட்டுக் கொடுத்து செல்லும் குணம், உள்ளிட்டவை அவர்களுடைய வாழ்க்கையில் வரக்கூடிய கருத்து வேறுபாடுகள், ஈகோ, பேச்சில் ஏற்படும் ஆணவம் உள்ளிட்ட உறவை முறிக்கக் கூடிய பிரச்சினைகளில் இருந்து காக்க உதவும். தம்பதியி இடையே சரியான பேச்சு வார்த்தை இல்லாமல் மற்றும் மரியாதை கொடுக்காத நிலை பெரும்பாலும் விவாகரத்து வரை செல்கின்றனர்.
இந்த இடத்தில் சிலர் ராசிகள் திருமண வாழ்க்கையில் அதிக சவால்களை சந்திக்க கூடியதாக இருக்கின்றன, அவற்றை பார்ப்போம்.
மேஷ ராசி
மேஷ ராசி சேர்ந்து நண்பர்கள் மிகவும் தைரியமானவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாக, கடினமான வேலையை ஆற்றலுடன் செய்து முடிக்க கூடிய நபர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த ஒரு செயலையும் அல்லது சூழ்நிலையும் சற்று கடினத்தன்மையுடன் அனுப்புவார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு பணிந்து போவதை விட தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும் அல்லது அதில் நிற்கவே விரும்புவார்கள்
இது போன்ற குணங்கள் திருமண வாழ்க்கை என வரும்போது தேவையற்ற மனக்கசப்பையும், ஈகோவையும் கொண்டு வரும். மேலும் இவர் எந்த ஒரு பிரச்சனையையும் நீண்ட காலத்திற்கு இழுப்பதை விட உடனடியாக தீர்க்க நினைப்பார்கள். அதனால் சில சமயங்களில் உணர்ச்சி வசப்பட்டு விரைவாக எதிர்வினை அகற்ற கூடியவர்களாக மாறுவதால் நிலைமை மோசமாக்கக்கூடும்.
மேஷ ராசி
மேலும் மேஷ ராசியை சேர்ந்தவர்கள் இயல்பிலேயே வெளிப்படையானவர்கள் என்பதால், இவர்களுடைய பேச்சு பல நேரத்தில் பிறரை காயப்படுத்தும். பல சமயங்களில் துணை என் மனம் காயப்படுவதால் இவர்களுடைய திருமண வாழ்க்கையில் அதிக அளவில் நெகிழ்வுதன்மை இல்லாமல், உறவில் கசப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இது போன்ற சூழல்கள் இவர்களின் உறவில் பிரச்சினைகளை உண்டாக்கி விவாகரத்து போன்ற கடினமான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்.
மிதுன ராசி
மிதுன ராசி நண்பர்கள் பொதுவாக இருமுக அணுகுமுறையால் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உண்மையில் இவர்களுடைய செயல்பாடு புரிந்து கொள்வது கஷ்டம். மிதுன ராசியை சேர்ந்தவர்கள் வசீகரமான நபர்கள். இதனால் இவர்கள் எளிதாக காதலில் விழுவார்கள்.இருக்கணும் இவர்களுடைய இரு வித விதமான எண்ணங்கள் உறவில் சிக்கலை ஏற்படுத்தும். காதல் விஷயத்தில் எப்போதும் புதிதான விஷயங்களை தேடக்கூடிய இவர்கள், தங்கள் துணையால் ஏமாற்றப்படுவது போன்று நினைப்பார்கள்.
மிதுன ராசி
மிதுன ராசி சேர்ந்தவர்களின் காதல் அல்லது திருமண உறவில் உணர்ச்சியின் ஆழத்தை அரிதாகவே காண முடியும். அவர்களிடம் முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் தீவிரமான காதல் இருப்பதாக துணை உணர மாட்டார்.
திருமணத்திற்கு பின்னரும் இது போன்ற நிலை, அவர்களுடைய உறவில் நிச்சயமற்ற தன்மையை, தம்பதியிலேயே தேவையற்ற சந்தேகங்களையும், மனக்கசப்புகளையும் ஏற்படுத்தும். இது போன்ற குணங்களே இவர்களுடைய திருமண முடிவதற்கு காரணமாக அமைகிறது. பெரும்பாலான வழக்குகள் விவாகரத்தில் முடிவடைகின்றன என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். இவர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாகவும் கூறுவதும், துணையின் அன்பை புரிந்து நடந்து கொள்வது உறவை மேம்படுத்தும்.
தனுசு ராசி
தனுசு ராசி சேர்ந்தவர்கள் தன்னுடைய எண்ணங்களை பரந்து மனப்பான்மையுடன் வைத்திருப்பார்கள். மேலும் இவர்கள் சாகசமான தன்மை கொண்டவர்களாகவும், புதிய யோசனைகளை ஆராய்ந்து கோட்பாடுகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இது போன்ற காரணங்களால் தனுசு ராசி சேர்ந்தவர்கள் ஓரு இடத்தில் நிலைத்து வாழ நினைப்பதில்லை. இவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள நபர்களுடன் பழகுவது, கருத்து பகிர்வது, கருத்துக்களை பெறுவது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் ஒரு உறவில் அதே மனப்பான்மை கொண்டிருக்கக்கூடிய நபருடன் நீண்ட நாட்கள் பயணிப்பது கடினமாக அமைகிறது. மேலும் இந்த விழிகளுக்கும் கட்டுப்படாமல் இருக்க நினைப்பதோடு, எல்லா வித விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டுவார்கள். இது போன்ற காரணங்கள், ஒரு உறவில் இணைந்த காலம் நிலைத்திருக்க இயலாது நிலை ஏற்படலாம்.
தனுசு ராசி
மேலும் தனுசு ராசியை சேர்ந்த நபர்களை திருமணம் செய்து கொண்டாலும், தங்கள் வாழ்க்கை துணையுடன் நீண்ட காலம் வாழ்வார்கள் என்று உண்மை நிலையை சந்தேகிக்க நேரிடும்.
எப்போதும் ஒரு புதிய மாற்றம் மற்றும் உற்சாகமான வாழ்க்கையை தேடக்கூடிய தனுசு ராசி சேர்ந்தவர்களை, திருமண வாழ்க்கை என்று வரும்போது அவர்களுக்கான துணைக்கு தனியாக நேரம் ஒதுக்குவது மற்றும் அவர்களுக்கான மரியாதை கொடுத்து வாழ்வது மட்டுமே இவர்களின் வாழ்க்கையை இனிமையாக நகர்த்த உதவும்.
இல்லை எனில் இவர்கள் திருமண வாழ்க்கை சீர்குலைய வாய்ப்பு உண்டு. நீண்ட காலம் இது போன்ற இவர்களின் வித்தியாசமான அணுகுமுறை துணையுடன் ஒத்துப் போகாத நிலை, திருமணமான சில வருடங்களுக்குள் விவாகரத்து செய்வது பொதுவானது என்று ஜோதிடம் கூறுகிறது.
குறிப்பு:
இது ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையிலான ஒரு பொதுவான விளக்கம் மட்டுமே. எந்தவொரு நபரின் திருமணம் அல்லது விவாகரத்துக்கான சாத்தியக்கூறுகளை ராசியை மட்டும் கொண்டு தீர்மானிக்க முடியாது. ஆளுமை, பரஸ்பர புரிதல், தகவல் தொடர்பு மற்றும் ஜாதகத்தின் முழுமையான பகுப்பாய்வு ஆகியவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
