அக்டோபரில் வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகம் பதிவு

-நமது நிருபர் –

சென்னை வானிலை மைய இயக்குனர் துரை நிருபர்களிடம் கூறியதாவது: தென் மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து சோமாலியா கடற்கரையை நோக்கி செல்லக்கூடும்

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அனேக இடங்களில் மிதமான முதல் கனமழையும்

ஒரு சில இடங்களில் மிக கனமழை பதிவாகியது.

3 மாவட்டத்திற்கு மிக கனமழை

11 மாவட்டத்தில் கனமழை

அனேக இடங்களில் மிதமான மழை பதிவாகியது.

அதிகபட்சமாக,சென்னையில் எம்ஜிஆர் நகரில் 15.4 செமீ மழை பெய்தது.

மிக கனமழை

அடுத்த 24 மணி நேரத்தில்

தூத்துக்குடி

நெல்லை

குமரி

நாளை மறுநாள்( அக்டோபர் 23)

ராமநாதபுரம்

தூத்துக்குடி

நெல்லை

குமரி

தென்காசி

விருதுநகர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் மாவட்டங்களில் உருவானதால் அங்குள்ள அனேக மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 3 நாட்கள் மிதமான மழையும், 25ம் தேதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

அரபிக் கடல் மேற்பரப்பில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் போது, வடகிழக்கு காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகமாக மழைப்பொழிவு இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலை, தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை

அக்டோபர் முதல் டிசம்பர் வரை 44 செமீ மழை பதிவாகும்.

அக்டோபர் 1 முதல் 21 வரை பதிவான மழை அளவு 11.1 செமீ

பதிவான இயல்பான அளவு 10 செமீ

இது, இயல்பில் இருந்து 12 சதவீதம் அதிகம். இவ்வாறு துரை கூறினார்.

Source link