அசாமில் வெள்ளத்தால் 4.45 லட்சம் பேர் பாதிப்பு: மீட்புப் பணி, நிவாரணம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு

புதுடெல்லி: அசாம் மாநிலத்​தில் கடந்த சில நாட்​களாக கனமழை பெய்து வரு​கிறது. கனமழை காரண​மாக பிரம்மபுத்திரா, தன்​சிரி உள்​ளிட்ட ஆறுகளில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது.

மழை, வெள்​ளம் காரண​மாக 12-க்​கும் மேற்​பட்ட மாவட்​டங்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளன. மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் 4.45 லட்​சம் மக்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். ஆயிரக்கணக்​கான மக்​கள் வீடு​களை விட்டு வெளி​யேறி நிவாரண முகாம்​களில் தங்​கி​யுள்​ளனர். அவர்​களுக்​குத் தேவையான உணவு, போர்வை உள்​ளிட்ட வசதி​களை மாவட்ட நிர்வாகங்​கள் வழங்கி வரு​கின்​றன.

இந்​நிலை​யில், அம்மாநிலம் முழுவதும் கனமழை​யால் ஏற்பட்டுள்ள வெள்​ளத்​தில் சிக்கி உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 68 ஆக அதி​கரித்​துள்​ளது. வெள்​ளத்​தில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களை மீட்கும் பணி​யில் மாநில மற்​றும் தேசிய பேரிடர் மீட்​புக்​குழு​வினர் ஈடு​பட்​டனர். அவர்​களுக்​கான மாற்று ஏற்​பாடு​களும் அவர்​கள் செய்து வரு​கின்​றனர்.

இதையடுத்து டெல்​லி​யில் நேற்று அசாம் மாநில எம்​.பி.க்​கள், மாநில அதி​காரி​களு​டன் மழை, வெள்ள மீட்​புப் பணி​கள் குறித்து பிரதமர் நரேந்​திர மோடி ஆய்வு நடத்​தி​னார். அப்​போது, பாதிக்கப்பட்​டுள்ள 4.45 லட்​சம் மக்​களுக்கு செய்​யப்​பட்​டுள்ள உதவி​கள், நிவாரண முகாம்​களின் நிலை குறித்து பிரதமர் மோடி கேட்​டறிந்​தார். தற்​போது வரை அங்கு 631 கிராமங்​களை வெள்ளம் சூழ்ந்​துள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது.

Source link