இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் சரன்ஷ் ஜெயினுக்கு வாய்ப்பு

மும்பை: இந்​திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்​கத்​தில் இலங்கையில் சுற்​றுப்​பயணம் செய்து 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. முதல் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலே நகரிலும், 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பு நகரிலும் நடைபெறுகிறது.

இந்​தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் சுழற்​சி​யின் அங்​க​மாக உள்​ளது. இந்த போட்​டிகளுக்கு முன்​ன​தாக இலங்கை மண்​ணில் 4 நாட்​கள் கொண்ட பயிற்சி ஆட்​டம் ஒன்​றி​லும் இந்​திய அணி விளை​யாட உள்​ளது. இந்த போட்டி ஆகஸ்ட் 7-ல் கொழும்பு நகரில் தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் இலங்கை டெஸ்ட் தொடருக்​கான இந்​திய அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது. இதில் மத்​திய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதாகும் ஆஃப் ஸ்பின் ஆல் ரவுண்​ட​ரான சரன்ஷ் ஜெயின் அறிமுக வீர​ராக சேர்க்​கப்​பட்​டுள்​ளார். சமீபத்​தில் இலங்கை ‘ஏ’ அணிக்கு எதி​ராக நடை​பெற்ற 2-வது டெஸ்ட் போட்டி​யில் இந்தியா ‘ஏ’ அணி​யில் இடம்​பெற்​றிருந்த சரன்ஷ் ஜெயின் 6 விக்கெட்​டு​கள் வீழ்த்​தி​யதுடன் 70 ரன்​கள் சேர்த்து அணி​யின் வெற்றிக்கு பங்​களிப்பு செய்​திருந்​தார்.

வாஷிங்​டன் சுந்​தர் காயம் காரண​மாக விளை​யா​டாத​தால் சரன்ஷ் ஜெயின் அணிக்​குள் கொண்​டு​வரப்​பட்​டுள்​ளார். சாய் சுதர்​சன், ஜஸ்​பிரீத் பும்ரா ஆகியோர் அணி​யில் சேர்க்கப்பட்டிருந்தா​லும் உடற்​தகு​தியை பொறுத்தே அவர்​கள், விளை​யாடு​வார்​கள் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அணி விவரம்:

ஷுப்​மன் கில் (கேப்​டன்), கே.எல்​.​ராகுல், யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், சாய் சுதர்​சன், தேவ்​தத் படிக்​கல், ரிஷப் பந்த், சரன்ஷ் ஜெயின், துருவ் ஜூரெல், ரவீந்​திர ஜடேஜா, குல்​தீப் யாதவ், மானவ் சுதார், ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ், பிரசித்​ கிருஷ்ணா, குர்​னூர்​ பிரார்​.

Source link