அஜித் 64-வது படம் எப்போதும் தொடங்கும்?

கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜித் தனது 64வது படம் குறித்தான அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் இருக்கிறார். இதற்கு காரணம் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பல்வேறு தயாரிப்பாளர்கள் படத்தை தயாரிக்க முன் வந்தும் அஜித்தின் சம்பளம் கேட்டு பின்வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் புதிதாக ‘ஏகே ஹோம் பேனர்’ என்ற பெயரில் சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அதன் பணிகளை ஷாலினி கவனிப்பார் என்று சமீபத்தில் ஒரு பரபரப்பு தகவல் வெளியானது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

ஏற்கனவே ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸஸ்’ என்ற பெயரில் அவரது ரேஸ் தொடர்பான வாழ்க்கை டாக்குமெண்ட்ரியை அஜித் தயாரித்து வருகிறார். இதனை ஏ.எல்.விஜய் இயக்க வர ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த டாக்குமெண்ட்ரி எந்த தடங்கலும் இல்லாமல் நடந்து வர அவரது 64வது படம் மட்டும் இன்னும் தொடங்கப்படாமலே இருக்கிறது. இப்படத்தை அஜித்தின் கடைசி பட இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரனே மீண்டும் இயக்க கமிட்டாகியுள்ள நிலையில் அஜித் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. படம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதும் இன்னும் உறுதியாகவில்லை. படப்பிடிப்பு குறித்து முன்பு பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், கடந்த பிப்ரவரியில் ஆரம்பித்துவிடும் எனக் கூறியிருந்தார். ஆனால் அது முடிந்து ஜூலையே வந்தும் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது. 

இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் அப்டேட் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து விட்டது. ஹீரோ தரப்பிடமிருந்தும் தயாரிப்பு தரப்பிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்டில் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன். அறிவிப்பு வெளியானதும் ஷூட் தொடங்கிவிடும்” என்றார். 

Source link