பதவி விலகுகிறாரா தர்மேந்திர பிரதான்? அமித்ஷா பேச்சு வார்த்தை

கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் இன்று (20-07-26) நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, இன்று காலையில் அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றனர்.ஆனால், டெல்லி காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.  

இதனால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பேரணி செல்ல முயன்ற சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறவும், அதாவது பேரணி செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் தடைகளை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர்.   

இதைத் தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை விசீனர். ஐந்து நிமிடங்களுக்குள் கிட்டதட்ட 50 கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இதனால், அங்குப் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து,  கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள்   மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

மேலும், நாடாளுமன்றத்திற்குள் யாரும் நுழையாதவாறு தடுக்க உள்ளேயும், வெளியேயும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக, துணை ராணுவப்படையும் அங்கு வரவைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், போராட்டத்தில் கலந்துகொள்ள யாரும் வராதபடி டெல்லியின் முக்கிய சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. அதே பொல, டெல்லியின் ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.   

மறுபுறம், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கரப்பான் பூச்சி கட்சியின் நிர்வாகிகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இதனிடையே, கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, தர்மேந்திர பிரதான பதவி விலகுவார் என்றும் சிலர் கருத்து தெரிவித்துத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Source link