அடேங்கப்பா.. ஒரு டூத் பிரஷின் விலை ரூ.47,000..!! அப்படி என்ன ஸ்பெஷல்..!! AI, அதிநவீன கேமரா வேற இருக்கா? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

உலக புகழ்பெற்ற எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான டைசன் (Dyson), வாயின் உட்பகுதியை துல்லியமாக கண்காணிக்கும் கேமரா, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மவுத்வாஷ் தெளிப்பான் வசதிகளுடன் கூடிய ‘கேமராஜெட்’ (CameraJet) என்ற அதிநவீன எலக்ட்ரிக் டூத்பிரஷை அறிமுகம் செய்துள்ளது.

பாரிஸ் நகரில் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனத்திற்கு அமெரிக்க மதிப்பில் 499.99 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 47,000 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பற்களை துலக்குவதற்கு கேமரா அவசியமா என்ற கேள்விகளுடன் இந்த விசித்திரமான சாதனம் இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பல் பராமரிப்பில் மிகவும் சவாலான விஷயமாக கருதப்படும் பற்களுக்கு இடையே உள்ள இடுக்குகளை முழுமையாக சுத்தம் செய்வதற்காகவே, சுமார் 6 ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு இந்த டூத்பிரஷை டைசன் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த பிரஷின் முனையில் 1,00,000 பிக்சல் திறன் கொண்ட சிறிய மேக்ரோ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு நொடிக்கு 28 புகைப்படங்களை எடுத்து, உள்ளமைக்கப்பட்ட இயந்திர கற்றல் தொழில்நுட்பம் மூலம் பற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை உடனடியாக கண்டறிகிறது.

அவ்வாறு இடைவெளி தென்பட்ட உடனேயே, இதில் உள்ள ‘கேப் ஆப்டிகல் டார்கெட்டிங்’ தொழில்நுட்பம் வெறும் 100 மில்லி விநாடிகளுக்குள் சிறிய அளவில் மவுத்வாஷை பீய்ச்சி அடிக்கிறது. இதன் மூலம் வழக்கமான பல் துலக்கலுடன் சேர்த்து, பற்களுக்கு இடையில் உள்ள அழுக்குகளை அகற்றும் ‘ஃப்ளாசிங்’ (Precision-flossing) வேலையும் ஒரே நேரத்தில் தானாகவே முடிந்துவிடுகிறது. மேலும், வைஃபை மற்றும் புளூடூத் மூலம் ‘மைடைசன்’ (MyDyson) செயலியுடன் இந்த பிரஷை இணைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் தங்களது வாயின் உள்பகுதியை செல்போன் திரையிலேயே நேரலையாக பார்க்க முடிவதுடன், பற்களின் எந்தெந்த பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன என்ற வழிகாட்டு வரைபடத்தையும் அறிந்துகொள்ள முடியும்.

வாய்க்குள் கேமரா வைப்பது குறித்த தனிநபர் ரகசிய பாதுகாப்பு கவலைகளுக்கு பதிலளித்துள்ள டைசன் நிறுவனம், பற்களை நேரலையாக பார்க்கும்போதும் மவுத்வாஷ் அடிக்கும்போதும் மட்டுமே கேமரா செயல்படும் என்றும், எந்தவொரு படமும் பிரஷிலோ அல்லது கிளவுட் சேமிப்பகத்திலோ பதிவு செய்யப்படாது எனவும் விளக்கம் அளித்துள்ளது. இந்த சாதனம் செராமிக் அல்ட்ரா ப்ளூ மற்றும் செராமிக் பிங்க் ஆகிய கவர்ச்சிகரமான வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. இதற்கென அதிக நுரை வராத பிரத்யேக பற்பசை மற்றும் மவுத்வாஷையும் டைசன் தயாரித்து வருகிறது; காரணம் அதிக நுரை வந்தால் கேமராவுக்கு முன்புறம் பார்வை தடைபடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதன் அதீத விலை மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பம் கொண்டதாக இருந்தாலும் ஒரு டூத்பிரஷிற்கு இவ்வளவு பெரிய தொகை தேவையா என்றும், பல் துலக்கும்போது செல்போன் திரையை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமா என்றும் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், இதன் உதிரி பாகங்கள் மற்றும் பிரத்யேக பேஸ்ட்டுகளின் செலவும் அதிகமாக இருக்கும் என நுகர்வோர்கள் கருதுகின்றனர்.

Dyson trained an AI on 470,000 dental images and put it inside a toothbrush. With a camera. That flosses for you. In real time.

It’s called the CameraJet for $499. Launched today.

A 100,000-pixel macro lens sits inside the brush head. It takes 28 images per second while you… pic.twitter.com/l1j4UxRfCH

— Vaibhav Sisinty (@VaibhavSisinty) September 1, 2026

ஊழல் செய்தால் இதுதான் கதி..!! பாரபட்சமே பார்க்க மாட்டோம்..!! அமைச்சர் நிர்மல்குமார் எச்சரிக்கை..!!



Source link