அடேங்கப்பா ரீ-என்ட்ரி! ஒரே நாளில் 2 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த ஷீத்தல் தேவி

மாற்றுத் திறனாளிகளுக்கான 5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் நகோயாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான்,  சீனா, தென்கொரியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 5-வது நாளான நேற்றும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க வேட் டையில் படுஜோராக செயல்பட்டு கவனத்தை ஈர்த்தனர். ஒரே நாளில் இந்தியா 7 தங்கம், 4 வெள்ளி, 15 வெண்கலம் என 26 பதக்கங்களை அள்ளியது. அத்துடன் தென்கொரியாவை பின்னுக்கு தள்ளி பதக்கப்பட் டியலில் 4-வது இடத்துக்கு ஏற்றம் கண்டது.

இந்நிலையில், வில்வித்தையில் பெண்களுக்கான காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப் போட்டியில் தோமன் குமார்-ஷீத்தல் தேவி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 151-148 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசிய ஜோடியை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இதேபோல், காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஷீத்தல் தேவி 142-139 என்ற புள்ளி கணக்கில் சிங்கப்பூரின் அலிம் நூர் சியாஹிடாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த இருகைகளும் இல்லாத 19 வயது ஷீத்தல் தேவி கால்கள் உதவியுடன் அம்பை இலக்கை நோக்கி துல்லியமாக எய்து தங்க மங்கையாக ஜொலித்துள்ளார். நடப்பு தொடரில் அவர் 3 பதக்கங்களை வென்றுள்ளார்.

உலக சாம்பியனான ஷீத்தல் தேவி முந்தைய நாளில் பெண்கள் இரட்டையர் பிரிவில் (பாயக் நாக்குடன் இணைந்து) வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் கடந்த (2022) பாரா ஆசிய விளையாட்டு போட்டியை போல இந்த முறையும் 3 பதக்கம் (2 தங்கம், ஒரு வெள்ளி) வென்று வில்வித்தை ராணியாக உருவடுத்துள்ளார்.

Source link