அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்தது ஏன்? சட்டபேரவையை தெறிவிக்கவிட்ட முதல்வர் – வாயடைத்து போன திமுக – cm vijay questions why were the schemes introduced by the aiadmk cancelled in the assembly

சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இடையூறு செய்யாமல், பொறுமையுடன் பதிலளிப்பதே உண்மையான தலைமைப் பண்பு. எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் பேசுவது 8 கோடி மக்களின் நலன்களுக்கு உகந்தது அல்ல. மக்களுக்காக மனதாரப் தயாரிப்புடன் பேசுவதே பொறுப்பான செயல் என முதல்வர் கூறினார்.

ரத்து செய்யப்பட்ட நலத்திட்டங்கள்

2021-ல் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல முக்கிய திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகப் பட்டியலிடப்பட்டது: தாலிக்கு தங்கம் திட்டம் அம்மா இருசக்கர வாகன திட்டம்
இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம் அம்மா மினி கிளினிக் திட்டம் 4 1/2 ஆண்டுகள் முடக்கப்பட்ட விலையில்லா லேப்டாப் திட்டம் மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ₹1,500 கோடி மதிப்பீட்டிலான கூனிமேடு கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ₹235 கோடி மதிப்பீட்டிலான அழகன்குப்பம் மீன்பிடி துறைமுக திட்டம் டாக்டர் ஜே. ஜெயலலிதா பல்கலைக்கழகம்” ஆகியவை மூடப்பட்டதாக கூறினார்.தொடர்ந்து பேசியவர்,கடந்ததிமுக ஆட்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புகள், போதைப்பொருள் புழக்கம், பெண்கள் பாதுகாப்பு கேள்விக் குறியானது போன்ற சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், ஆளுங்கட்சியினர் மீதான புகார்களில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யத் தாமதம் செய்யப்பட்ட சில உதாரணங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கடலூர் எம்.பி விவகாரம்
கடலூர் திமுக எம்.பி டி.ஆர்.வி. ரமேஷிற்குச் சொந்தமான ஆலையில் தொழிலாளி உயிரிழந்த வழக்கில், கடும் கண்டனத்திற்குப் பிறகே தாமதமாகக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விருதுநகர் சம்பவம்
திமுக நிர்வாகிகள் சிலர் மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டில் விமர்சனங்களுக்குப் பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருகம்பாக்கம் பெண் காவலர் அத்துமீறல்
2022 டிசம்பரில் பெண் காவலரிடம் அத்துமீறிய திமுக இளைஞரணி நிர்வாகிகள் மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாமல், சி.எஸ்.ஆர் மட்டுமே தரப்பட்டு, எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்குப் பிறகே 2023 ஜனவரியில் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை கோயில் சம்பவம்
பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிய திமுக நிர்வாகி மற்றும் அவரது மனைவி தப்பிக்க முந்தைய அரசு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

பல்லாவரம் பணிப்பெண் விவகாரம்
முன்னாள் திமுக எம்.எல்.ஏ மகன் இல்லத்தில் பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஏற்பட்டது என்று அடுக்கடுக்கான வழக்குகளை முதல்வர் விஜய் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து பேசியவர் திமுக இருக்கும் இடத்தில் தான் தப்பே நடக்கும்.தப்பு நடக்கும் இடத்தில் தான் திமுகவே இருக்கும். எதிர் கட்சியினர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்கிறார்களே தவிர, நாங்கள் ஊழலே செய்யவில்லை” என்று கூறத் துணிவில்லை என்றார்.மக்களின் நம்பிக்கையைப் பெறக் கட்டமைக்கப்படும் போலியான பிம்பங்களையும் பிராண்டுகளையும் தோண்டித் துருவி உடைப்போம் என்றும் முதல்வர் விஜய் எச்சரித்தார்.

மக்களுக்கான அரசியல்

1967, 1977, 1982 மற்றும் 2026.. அண்ணா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மற்றும் விஜய் ஆகியோரின் வழியில் மக்கள் ஆதரவும் இயற்கையும் தங்கள் பக்கமே இருப்பதாகத் தெரிவித்தார். “நான் நாற்காலிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ வரவில்லை; மக்களுக்கு நல்லது செய்யவும், அவர்களின் அன்பிற்கு நன்றிக்கடன் செலுத்தவுமே அரசியலுக்கு வந்துள்ளேன்” எனத் தனது உரையை நிறைவு செய்தார்.

Source link