தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அய்யாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர வாகனத் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த மூன்று நபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையின் போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகம் வலுக்கவே, அவர்கள் வைத்திருந்த பைகளை காவல்துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
அதில், விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 250 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சிக்கிய அந்த மூன்று பேரும் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இவர்கள் மீது அந்த பகுதிகளில் ஏராளமான வழங்குகள் உள்ன. மிர்த்தா (வயது 40), ராஜா (வயது 18) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 25) என்பது தெரியவந்துள்ளது.
கஞ்சாவைப் பறிமுதல் செய்த அய்யாபுரம் காவல்துறையினர், மூன்று பேரையும் உடனடியாகக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின்படி பாளையங்கோட்டை
மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த இப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணிகளையும் சோதனைகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
