“அநீதிக்கு எதிரான அறம் வெல்லும்” – முதல்வர் விஜய்!

கடவுள் மகா விஷ்ணுவின் 8வது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நாளை, கிருஷ்ண ஜெயந்தி நாளாக இந்து மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்தாண்டின் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று (04-09-26) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய், கிருஷ்ண ஜெயந்தி நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Source link