அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் – முழு விவரம்

இந்த திட்டத்துக்காக பயனாளிகள் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் கேஸ் இணைப்பு தொடர்பான விவரங்கள் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்கள் ஆதாரை இணைக்கும் e-KYC நடைமுறையை முடித்திருக்க வேண்டியது அவசியம்.

ரேஷன் கார்டில் குடும்பத்தின் ஆண்டு வருமான விவரம் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், வருமானச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம்.

இத்திட்டத்தின்கீழ், ஒருவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கேஸ் இணைப்புகள் இருந்தாலும், முதன்மையான இணைப்புக்கு மட்டுமே ஆண்டுக்கு 3 சிலிண்டர்களுக்கான பலன் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இணைப்புக்கும் தனித்தனியாக இந்தப் பலனைப் பெற முடியாது.

அதாவது, ஒரு நுகர்வோர் தங்களின் பெயரில் இரண்டு அல்லது மூன்று சிலிண்டர் (Two or three Bottle Cylinder – DBC) இணைப்புகளைப் பயன்படுத்தினாலும், திட்ட விதிகளின்படி ஒரு சிலிண்டருக்கு மட்டுமே மானியத் தொகை முழுமையாகக் கிடைக்கும்.

மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற பயனாளிகளின் வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தேவையா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

Source link