சீன உணவகத்தில் விற்பனையாகும் எண்ணெயில் பொரித்த கரப்பான் பூச்சிகள்: மருத்துவ குணம் உள்ளதாக தகவல்

Summary

சீனாவில் உள்ள உணவகம் ஒன்று கரப்பான் பூச்சி இனத்தை சேர்ந்த பூச்சிகளை எண்ணெயில் பொரித்து, அதனை இனிப்பு பலகாரங்கள் மற்றும் முட்டைகளில் வைத்து விற்பனை செய்து வருவது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தெற்கு சீனாவில் உள்ள ஷூண்டே நகரில் பிரபலமான உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த உணவகத்தில், ‘வாட்டர் ரோச் எக் டார்ட்ஸ்’ (water roach egg tarts) என்ற பெயரில் உணவு ஒன்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தில் விற்பனை செய்யப்படும் சில தின்பண்டங்களில், ஒரு முழு பூச்சி ஒன்று எண்ணெயில் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த பூச்சி வகைகள் உள்ளூர் சிறப்பு உணவாக சீனாவில் விளங்குகின்றது.

சீனாவில் பின்பற்றப்படும் கலாச்சாரம் மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகளில், இந்த வண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மருத்துவ குணம்

இந்த பூச்சிகள், சருமத்திற்கும் சிறு நீரகங்களுக்கும் ஊட்டமளித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ரத்த கட்டுகளை நீக்க உதவுவதாக அறியப்படுகிறது.

மேலும் இந்த வகை வண்டுகள், தசை மற்றும் எலும்புகளை வலுப்படுத்துவதாக உள்ளூர் மக்களால் நம்பப்பட்டு வருகிறது.

இந்த உணவகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் பண்டங்களில், இனிப்பு மற்றும் கார சுவைகளுடன் சேர்த்து முட்டைகள் மேல் வண்டுகள் இடம்பெற்றுள்ளன.

இணையத்தில் வைரல்

இந்த நிலையில் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் வினோத உணவு பண்டம், இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து பயனர் ஒருவர் கூறுகையில், “அதை சாப்பிடுவது இருக்கட்டும், முதலில் அதை பார்ப்பதையே என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை” என்று பதிவிட்டார்.

மற்றொரு பயனர், “நான் அவற்றை சுவைத்து பார்த்ததில்லை, ஆனால் சீன உணவு சிகிச்சையில் கரப்பான் பூச்சிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என பதிவிட்டுள்ளார்.

Source link